இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

Karur stampede: குற்ற உணர்ச்சியற்று பேசினாரா தவெக நிர்வாகி நிர்மல்குமார்?
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் குற்ற உணர்ச்சியற்று பேசியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்..

Karur stampede: பெண் காவலர் மூர்ச்சையடைந்த இளைஞனை CPR கொடுத்து காப்பாற்ற முயன்றதாக பரவும் வீடியோ உண்மையானதா?
கரூர் சம்பவத்தில் மூர்ச்சையடைந்த இளைஞனை பெண் காவலர் ஒருவர் CPR கொடுத்து காப்பாற்ற முயன்றதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

TVK Karur stampede: விகடன் வெளியிட்டதாக பரவும் தவறான கருத்துப்படம்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விகடன் வெளியிட்ட கருத்துப்படம் என்று பரவும் படம் தவறானதாகும்.

TVK Karur stampede: கரூர் கூட்ட நெரிசலில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதால் அங்கு தவெக கட்சி கலைக்கப்பட்டதா?
கரூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலியானதால் அங்கு தவெக கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.