Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டது.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
“அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் இருந்த இரண்டு கப்பல்கள் ஒரு கோபமான ஜம்போ திமிங்கலம்/சுறாவால் முழுமையாக அழிக்கப்பட்டன” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பலகள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் ‘@AlekseyN11’ என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் “I’m finally done! #megalodon #meg #animation #digitalart #CGI #3D” என்று குறிப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோவின் முழுப்பகுதி பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவின் கமெண்ட் பகுதியில் வைரலாகும் இவ்வீடியோ அன்ரியல் எஞ்சின் (Unreal Engine) மற்றும் 3டி மேக்ஸ் (3D Max) சாஃப்ட்வேர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக இவ்வீடியோவை பதிவிட்ட பயனர் தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து அந்த பயனர் குறித்து ஆரய்கையில் அவர் ஒரு கம்ப்யூட்டர் 3டி டிசைனர் என அவரின் முகப்பு பக்க தகவல்கள் வாயிலாக அறிய முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரல்லகும் வீடியோ உண்மையான வீடியோ அல்ல; கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது.
Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?
Conclusion
அட்லாண்டிக் பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் திமிங்கலத்தால் உடைக்கப்பட்டதாக பரவும் வீடியோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
X post from the user, @AlekseyN11, Dated March 10, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.