Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்தார் யோகி ஆதித்யநாத்.
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர் யோகி ஆதித்யநாத் அல்ல, அவர்போல் வேடமணிந்தவர் ஆவார்.
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ABP MAJHA யூடியூப் பக்கத்தில் நவம்பர் 06, 2024 அன்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அச்செய்தியில் மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள அக்கோலா பகுதியில் போலி யோகி ஆதித்யநாத்தை வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வைரலாகும் வீடியோவை கவனமாக பார்க்கையில் வீடியோவில் காவி உடையில் காணப்படும் நபர் யோகி ஆதித்யநாத் அல்ல என தெளிவாக அறிய முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் லோக்சத்தா இணைய ஊடகத்தில் நவம்பர் 07, 2024 அன்று இதுக்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வைரலாகும் வீடியோவில் காவி உடையில் காணப்படும் நபர் பாஜகவை சார்ந்தவர் என்றும், அவர் பெயர் சந்தோஷ் தூலே என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் நவம்பர் 09, 2024 அன்றே வெளியிடப்பட்டிருந்தது.
Also Read: புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ உண்மையா?
உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரச்சாரம் செய்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படுபவர் யோகி ஆதித்யநாத் அல்ல, அவர்போல் வேடமணிந்தவர் ஆவார். அந்நபர் பெயர் சந்தோஷ் தூலே என்பதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Video by ABP Majha on 6th Nov 2024
Article by Loksatta on 7th Nov 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
March 18, 2025
Komal Singh
March 10, 2025
Ramkumar Kaliamurthy
March 8, 2025