நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி எனப்படும் ’ஓவர் தி டாப்’ என்னும் இணையதளத் தளங்கள் மூலமாக விரைவில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்ற செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

Fact Check/Verification:
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’.
இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக பலரும் பகிர்ந்த தகவல் சமூக வலைத்தளங்களில் கடந்த வாரத்தில் வைரலாகியது. இதனை பல முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.

அதிகாரப்பூர்வத் தகவல் போலவே சமூக வலைத்தளங்களிலும், முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி வைரலாகி ட்ரெண்டாகியது.
ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகிய இந்த தகவல் குறித்து ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை பற்றி அறிய இச்செய்தி குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாவதாக வெளியான தகவல் குறித்து நாம் ஆராய்ந்தபோது, மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘XB Film Creators’ நவம்பர் 28ஆம் தேதியன்று இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்து வெளியிட்டிருந்த அறிக்கை கிடைத்தது.
மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலும் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.
அதன்படி, மாஸ்டர் திரைப்படம் உறுதியாக பொங்கல் ரிலீஸாக தியேட்டரில்தான் வெளியாகிறது. அதன்பிறகே, ஓடிடி தளங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
conclusion:
எனவே, சமூக வலைத்தளங்களில் வைரலாகிய மாஸ்டர் திரைப்பட ஓடிடி வெளியீடு குறித்த தகவல் உண்மையில்லை. தகுந்த ஆதாரங்களுடன் இதுகுறித்த விளக்கத்தை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு தெரிவித்துள்ளோம்.
Result: False
Our Sources:
Twitter Profile: https://twitter.com/XBFilmCreators/status/1332674440023269379?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)