ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த பிரதமராக ரகசிய கூட்டம் கூட்டினார் என்பதாக பரவும் வதந்தி!

உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த பிரதமராக ரகசிய கூட்டம் கூட்டினார் என்பதாக பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த பிரதமராக ஆகும் வகையில் ரகசிய கூட்டம் ஒன்றினை பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் கூட்டியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

உள்துறை அமைச்சர்
Source: Facebook

பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அமெரிக்கா சென்றுள்ளார்.

Also Read: கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

இந்நிலையில், “பிரதமர் மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட வேளையில் அமித்ஷா கூட்டிய ரகசிய ஆலோசனைக் கூட்டம்! பிரதமர் ஆகிறாரா அமித்ஷா?” என்கிற நியூஸ் கார்டு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

உள்துறை அமைச்சர்
Source: Facebook

Facebook Link

Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

உள்துறை அமைச்சராக ஒன்றிய அரசில் பதவி வகிக்கும் அமித்ஷா, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ரகசிய கூட்டம் ஒன்றினைக் கூட்டியதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ் கார்டு நியூஸ் 18 சேனல் வெளியிட்டிருப்பது போன்று இருந்ததால், அதுபோன்ற செய்தி எதுவும் வெளியாகியுள்ளதா என்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

நமது தேடுதலில், “பேருந்து வசதி கோரி ஊரை காலி செய்து காட்டில் குடியேறிய கிராம மக்கள்” என்கிற வீடியோ செய்தியில் இருந்து குறிப்பிட்ட ப்ரேம் மட்டும் கட் செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டிருப்பது நமக்குத் தெரிய வந்தது. இதனை நியூஸ் 18 தரப்பிலும் நாம் உறுதிப் படுத்திக் கொண்டோம்.

உள்துறை அமைச்சர்
Source: Twitter

Twitter Link

மேலும், முன்னணி ஊடகங்கள் எதிலும் இதுபோன்ற செய்தி வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Conclusion:

உள்துறை அமைச்சராக ஒன்றிய அரசில் பதவி வகிக்கும் அமித்ஷா, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ரகசிய கூட்டம் ஒன்றினைக் கூட்டியதாகப் பரவும் செய்தி எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 18 Tamil Nadu

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular