Monday, December 15, 2025

Fact Check

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பெண் தாக்கப்பட்டாரா?

banner_image

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தப் பெண் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Fact Check/Verification

சமீபத்தில் இந்தியாவையே புரட்டிப் போட்ட சம்பவம், ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவம்.

பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் எனும் கிராமத்தில், உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்த நான்கு பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து, அவர் நாக்கை அறுத்து, அவரை புதருக்குள் வீசியுள்ளனர்.

இச்சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சைய பலனின்றி செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இதன் அவர் உடல் காவல்துறையினரால் நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்த அறிந்தப்பின் நாடே கொந்தளித்தது.  உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுப்போன்ற வன்முறைகள்  தொடர்ந்து நிகழ்த்துப்படுவதாகக் கூறி  உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் “ மோடி ஆசீர்வாதத்தால் ஆட்சி நடக்கும் உத்திரப்பிரதேசத்தில், யோகியின் யோகிதை ஆட்சியில், தாழ்த்தப்பட்ட பெண் பொதுக் கிணற்றில் குடிநீர் எடுத்ததாக கூறி, அந்தப் பெண்ணை பெண்ணென்றும் பாராமல், ஆதிக்க நாய்கள் அவர்கள் செய்யும் அநியாயத்தை பாருங்கள்” என்று கூறி  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இவ்வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களில் தற்சமயம் வைரலாகி வரும் இவ்வீடியோக் குறித்து  அறிய அதை ஆய்வு செய்தோம்.

எங்கள் ஆய்வில், இவ்வீடியோப் பதிவில் கூறப்பட்டத் தகவல்கள் அனைத்தும்  பொய்யானது என்று தெரிய வந்துள்ளது.

உண்மையில்  வீடியோவில் காணப்படும் சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடக்கவில்லை. இச்சம்பவமானது குஜராத்தில் நடந்ததாகும்.

அந்தப்பெண் வேற்று சாதியைச் சார்ந்த ஒருவருடன் ஓடிப்போனதால், அவர் சாதியைச் சார்ந்தவர்கள் அவர் தந்தையின் முன்னிலையிலேயே அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதை சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் தனது கைபேசி மூலம் வீடியோ எடுத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து 16 பேர் மேல் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த மே மாதமன்று நடைப்பெற்றுள்ளது. இதுக்குறித்த செய்தி நியூஸ் 18-யில் வெளிவந்துள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாக வரலான வீடியோக் குறித்தச் செய்தி.
SOURCE: NEWS 18

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் தெளிவாகுவது என்னவென்றால், வைரலாகும் சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடக்கவில்லை, அது குஜராத்தில் நடந்தது.

 அதேபோல் பொதுக்கிணற்றில் நீர் எடுத்ததற்காக ஆதிக்க சாதியினரால்  அப்பெண் துன்புறுத்தப்பட்டார் என்று கூறப்பட்டத் தகவலும் பொய்யானது. வேற்று சாதியினருடன் ஓடிப்போனதால், அவரின் சொந்த சாதியினரே அவரைத் துன்புறுத்தியுள்ளனர்.

ஆகவே சமூக வலைத்தளங்களில் பரப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகிறது.

Result: False


Our Sources

Twitter Profile: https://twitter.com/Raja_Muthamil/status/1312824141645578242

Twitter Profile: https://twitter.com/dravidan47/status/1313421235628302342

News 18: https://www.news18.com/amp/news/india/gujarat-minor-tribal-girl-brutally-thrashed-for-eloping-video-goes-viral-2640541.html

Twitter Profile: https://twitter.com/arumugasamy_dmk/status/1313082970589196288



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,598

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage