Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்து விரோதிகளின் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலாளர்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உத்திரப் பிரதேசத்தை குப்பை மேடாக்க முடியாது என்று கூறியதாக TN NEWS 24 என்ற ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

தீபாவளி என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகள். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகா, ஜார்கண்ட், மற்றும் சட்டிஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கடுமையான விதிமுறைகளுடன் இரண்டு மணி நேரங்கள் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் சிவகாசிதான் இந்தியாவிலேயே அதிகப் பட்டாசுத் தொழிற்சாலை இருக்கும் பகுதியாகும். இந்தியாவில் தற்போது பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இதையே நம்பி தொழிலாக செய்து வரும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் கஷ்டத்தையும் ஏற்படுத்தும் என்பதில் துளியும் ஐயமில்லை.
இந்நிலையில்,
“இந்து விரோதிகளின் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலாளர்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உத்திரப் பிரதேசத்தை குப்பை மேடாக்க முடியாது”
என்று உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக TN NEWS 24 நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைப் பலரும் பகிர்ந்து, இதுக்குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிய, யோகி ஆதித்யநாத் தமிழக மக்கள் குறித்து மேற்கூறியவாறு கூறினாரா என்பதை முதலில் தேடினோம்.
ஆனால் நம் தேடலில், யோகி ஆதித்யநாத் அவர்கள் தமிழக மக்கள் குறித்து இவ்வாறுப் பேசியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இதன்பின், இச்செய்தி TN NEWS 24-யின் நியூஸ்கார்டை பயன்படுத்திப் பரப்பப்படுவதால், இந்த ஊடகத்தின் அதிகாரப் பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இச்செய்திக் குறித்து தேடினோம்.
அவ்வாறு தேடியதில் TN NEWS 24-யின் ஃபேஸ்புக் பக்கத்தில், பரவி வரும் இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், இதுபோன்ற எந்த செய்தியையும் TNNEWS24 வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

TN NEWS 24-யின் இந்த ஃபேஸ்புக் பதிவு மூலம் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யான ஒன்று என்பது நமக்குத் தெளிவாகிறது.
“இந்து விரோதிகளின் கூடாரமான தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிலாளர்கள் வறுமையால் சாவார்கள் என்பதற்காக தூய பூமியான உத்திரப் பிரதேசத்தை குப்பை மேடாக்க முடியாது” என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Twitter Profile: https://twitter.com/Mugamoodi_1/status/1326531949364711424
Facebook Profile: https://www.facebook.com/ra.ravikumarr/posts/4365016623524915
Facebook Profile: https://www.facebook.com/saravanayumy/posts/3425551397480935
TN NEWS24: https://www.facebook.com/tnnews24air/posts/195255932045637
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)