Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
விஜய் மல்லையா வழக்கில் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரை கடன் கொடுக்க வங்கிகளை நிர்பந்தித்தனர் என்பதற்காக முதல் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் அறிவித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
விஜய் மல்லையா, கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் மதுபான நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த இவர், இந்திய வங்கிகளில் கடன்களை எக்கச்சக்கமாக பெற்றுக் கொண்டு, அதனை அடைக்க இயலாமல் லண்டனில் சென்று சொகுசாக வாழ ஆரம்பித்தார்.
இந்நிலையில், கிட்டதட்ட 9000 கோடி வங்கிக்கடன் மோசடி செய்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு, லண்டலின் கைது செய்யப்பட்டார் இவர். இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு அவரைக் கைது செய்தது. அவரை இந்தியாவிற்கு அழைத்து செல்ல ஏற்கனவே உத்தரவாகியுள்ளது.
மேலும், அவரது 5,646.54 கோடி சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், “மல்லையாவிற்கு கடன் கொடுக்க வங்கிகளை நிர்பந்தித்த மன்மோகனும், சிதம்பரமும் முதல் குற்றவாளிகள். லண்டன் நீதிபதி தீர்ப்பு. இந்த ஊர்ல இவனுக பேரு பொருளாதார நிபுணர்” என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
விஜய் மல்லையா வழக்கில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முதல் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகப் பரவும் தகவல் குறித்த உண்மைத்தன்மை அறிய முதலில் அந்த தகவல் எப்போது பரவ ஆரம்பித்தது என்பதை ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அந்த வைரல் தகவல் கடந்த 2020, ஜூன் முதலே பரவி வருவது நமக்குத் தெரிந்தது. மேலும், இதுகுறித்த தீர்ப்புகள் எதுவும் வந்ததாக சர்வதேச செய்திகள் வெளியாகவில்லை என்பதும் தெரியவந்தது.
மேலும், 2020 ஆம் ஆண்டு வெளியான விஜய் மல்லையா வழக்கு குறித்த செய்திகளை ஆராய்ந்தபோது இந்தியாவிற்கு அவரை நாடு கடத்துவதற்கு எதிராக அவர் தொடர்ந்த அப்பீல் வழக்கில் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது லண்டன் நீதிமன்றம். அதற்கான செய்தி தி வீக் நாளிதழில் வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பின் நகல் மற்றும் அதுதொடர்பான செய்திகளை இங்கே இணைத்துள்ளோம். குறிப்பிட்ட அந்த தீர்ப்பு நகல்களில் ப.சிதம்பரம் பற்றியோ, மன்மோகன் சிங் பற்றியோ எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை.
தொடர்ந்து, முதலில் 2018ம் ஆண்டு லண்டன் வெஸ்ட்மினிஸ்ட்ரி நீதிமன்றத்தில் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணையில் ஈடுபட்ட நீதிபதி எம்மா அர்பத்நாட், “விஜய் மல்லையாவிற்கு எதிராக ஜோடிக்கப்பட்ட வழக்குகள், புகார்களாக எதுவும் இல்லை.” என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், “விஜய் மல்லையாவிற்கு கடன் அளிப்பதற்கு முன்பாக பின்புல விவரங்களைச் சரியாக ஆராயத் தவறி விட்டன. தங்களுடைய வழிகாட்டு நெறிமுறைகளை மல்லையாவிற்கு கடன் கொடுத்த வங்கிகள் மீறியுள்ளன” என்று தெரிவித்தார் என்பதாக செய்திகள் வெளியாகின.
அவரது தீர்ப்பு விவரங்களை தி வயர் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதனை இங்கே இணைத்துள்ளோம். குறிப்பிட்ட வழக்கு விசாரணையிலும் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் முதல் குற்றவாளிகள் என்பதாக எங்கேயும் வாசகங்கள் இடம்பெறவில்லை.
தொடர்ந்து ஆராய்ந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு பாஜக தரப்பில் மல்லையாவின் கடிதம் என்கிற பெயரில் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதும் அதனை அவர்கள் இருவரும் மறுத்ததும் செய்தியாக இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆனால், லண்டன் நீதிமன்றத்தில் அவர்கள் இருவருடைய பெயரும் விஜய் மல்லையா வழக்கில் எங்கும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா வழக்கில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முதல் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
BBC: https://www.bbc.com/tamil/business-57592444
Puthiyathalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/4274/Vijay-Mallya-arrested-in-London
UK Judiciary Copy: https://www.judiciary.uk/wp-content/uploads/2020/04/Mallya.APPROVED.pdf
The Telegraph: https://www.telegraphindia.com/india/what-london-magistrate-emma-arbuthnot-said-while-ordering-vijay-mallya-s-extradition/cid/1678394
The quint: https://www.youtube.com/watch?v=5K_sB9RkqgA&feature=youtu.be
Times Now: https://www.youtube.com/watch?v=Zb6qTC6ua2A
The Wire: https://thewire.in/business/vijay-mallya-uk-extradition
NDTV:https://www.ndtv.com/india-news/vijay-mallya-extradition-case-full-text-of-uk-court-judgment-1960556
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 18, 2025
Komal Singh
March 10, 2025
Ramkumar Kaliamurthy
March 8, 2025