பங்களாதேஷில் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ள வைத்ததாக பரவும் தகவல் தவறானதாகும். இட ஒதுகீடுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போரட்டத்திற்கு இடையில் தொழுகை செய்த நிகழ்வை திரித்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.
ஆதவ் ஆர்ஜூனை நீக்கியப்பின் உதயநிதியை வாழ்த்தும் பாடலை கேட்டுக்கொண்டே திருமாவளவன் காரில் பயணித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோவும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.