Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Uncategorized @ta
“பாஜகவில் சேர தயக்கம் காட்டியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன்” என்று டிக்டாக் பிரபலம் சூர்யா கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் புகைப்பட செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
டிக்டாக்கில் ரவடி பேபி சூர்யா எனும் பெயரில் பிரபலமானவர் சுப்புலட்சுமி. இவர் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியக் குற்றத்திற்காக திருச்சி மாநகர விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த புதன்கிழமை (09/12/2020) அன்று கைது செய்யப்பட்டார்.
இதுக்குறித்த செய்தியானது நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
இந்நிலையில், “பாஜகவில் சேர நான் தயக்கம் காட்டியதே கைது நடவடிக்கைக்கு காரணம்” என்று டிக்டாக் சூர்யா குற்றம் சாட்டியதாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நியூஸ் 7 தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தியை அடிப்படையாக வைத்தே டிக்டாக் சூர்யாவையும் பாஜகவையும் தொடர்புபடுத்தி இத்தகைய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
ஆகவே ஆய்வின் முதற்படியாக, இத்தகைய ஒரு புகைப்படச் செய்தியை நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்டதா என்பது குறித்து அறிய முடிவெடுத்தோம்.
இதற்காக நியூஸ் 7 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் இப்புகைப்படச் செய்தி குறித்துத் தேடினோம்.
அவ்வாறுத் தேடியதில் நியூஸ் 7 தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில்,
“டிக்டாக் பிரபலம் சூர்யா குறித்து நியூஸ்7 தமிழ் பெயரில் சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது!’
என்று ஒரு பதிவை பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில், பாஜக குறித்து டிக்டாக் சூர்யா குற்றச்சாட்டு கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது தெளிவாகிறது.
“பாஜகவில் சேர தயக்கம் காட்டியதால்தான் நான் கைது செய்யப்பட்டேன்” என்று டிக்டாக் பிரபலம் சூர்யா கூறியதாக சமூகம் வலைத்தளங்களில் வைரலான நியூஸ்7 தொலைக்காட்சியின் புகைப்பட செய்தி பொய்யானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/gjalaludeen/posts/3586746688049859
Facebook Profile: https://www.facebook.com/tholkappiyan.thangarajan/posts/3404290853016865
News 18 Tamilnadu: https://www.youtube.com/watch?v=g3gYIBi1WhM
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/posts/4160752030653640
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)