ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeUncategorized @taஅண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தத்திற்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலையா?

அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தத்திற்கு காரணம் ரஜினிகாந்தின் உடல்நிலையா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது.

அண்ணாத்தே குறித்து பரவும் பதிவு
Source: Twitter

Fact Check/ Verification

நடிகர் ரஜினிகாந்த்  அவர்களின் நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம் அண்ணாத்தே. இப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

2019 டிசம்பர் மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது.  பின்பு கொரானா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, அண்மையில்தான் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் மீண்டும் அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பத்திரிக்கையாளர்களான ‘வலைப்பேச்சு’ பிஸ்மி, ‘வலைப்பேச்சு’ அந்தணன் உள்ளிட்டோரும் இத்தகவலை தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/jbismi14/status/1341674260255817728

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.

அவ்வாறு செய்ததில் இத்தகவலானது முற்றிலும் பொய்யானது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட கருத்தானது முற்றிலும் தவறாகும்.

உண்மையில் அண்ணாத்தே படக்குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு பேரிடம் கொரானாத் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டக் காரணத்தினாலேயே படப்பிடிப்பு தள்ளி போடப்பட்டுள்ளது.

இத்தகவலை சன் பிக்சர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுத்தவிர, ரஜினிகாந்த் மற்றும் மற்ற படக்குழுவினருக்கு கொரானாத் தொற்று இல்லை என்பதையும் சன் பிக்சர் நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Souce: Twitter

Conclusion

ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக பரப்பப்படும் தகவலானது முற்றிலும் தவறானது என்பதையும், அண்ணாத்தே படக்குழுவைச் சார்ந்த நான்கு பேருக்கு கொரானாத் தொற்று ஏற்பட்டிருந்ததாலேயே  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Kollywood Street: https://twitter.com/KollywoodStreet/status/1341739486674239488

Valai Pechu Bismi: https://twitter.com/jbismi14/status/1341674260255817728

Valai Pechu Anthanan: https://twitter.com/Anthanan_Offl/status/1341674295605411841

Sun Pictures: https://twitter.com/sunpictures/status/1341696242145841153


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular