Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Uncategorized @ta
தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகிய நடராஜன் அவர்கள் வாழும் வீடு எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடராஜன். இவரெல்லாம் ஒரு வீரரா? என்று ஏளனமாக பார்த்த கண்களை, ஆச்சரியமாக பார்க்க வைத்தவர் இவர்.
நடராஜனின் வெற்றியைத் தன் வெற்றியாக ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் கொண்டாடி வருகிறது. இதற்கு காரணம் இதுவரை ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே தமிழகம் சார்பில் இந்திய அணிக்கு செல்ல முடியும் என்ற நிலையை உடைத்தெறிந்து புது வரலாற்றைப் படைத்துள்ளார் நடராஜன்.
இந்த கிராமத்து வீரனின் வெற்றியை பாராட்டி பலர் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அப்பதிவுகளில் நடராஜன் வாழ்ந்த வீடு என்று ஒரு வீட்டின் புகைப்படமும் பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தில் இருக்கும் வீடு உண்மையிலேயே நடராஜனின் வீடுதானா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் வீடு உண்மையிலேயே நடராஜன் வீடுதானா என்பதை அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம். அவ்வாறு ஆய்வு செய்ததில் இதன் பின்புலத்தில் இருந்த உண்மைகள் நமக்கு தெரிய வந்தது.
உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் வீடானது நடராஜனின் வீடே கிடையாது. அது, அவரது தாயார் நடத்தும் உணவுக் கடையாகும்.
சன் நியூஸ் தொலைக்காட்சியானது நடராஜன் அவர்களின் பெற்றோரை, அவர்களின் உணவுக் கடையிலிருந்து பேட்டி எடுத்து, அதை யூடியூபில் பதிவிட்டிருந்தது. அப்பேட்டியில் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய புகைப்படத்தில் இருந்த வீட்டினையும் நம்மால் காண முடிந்தது.
அப்பேட்டி உங்கள் பார்வைக்காக:
இதேபோல், ‘உலகம் சுற்றலாம் வாங்க’ எனும் யூடியூப் சேனலில் நடராஜன் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடம் பேட்டி எடுத்திருந்தனர். இதில் நடராஜன் அவர்களின் உண்மையான வீட்டை நம்மால் காண முடிந்தது.
அப்பேட்டி உங்கள் பார்வைக்காக:
மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வீடியோக்களின் அடிப்படையில் காணும்போது, சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் இருக்கும் வீடானது நடராஜனின் வீடல்ல என்பதும், அது உண்மையில் நடராஜனின் தாயார் நடத்தும் உணவகம் என்பதும் நமக்கு தெளிவாகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்களின் வீடு என்று சமூக வலைத்தளங்களில் பரப்படும் புகைப்படம் அவரது வீடல்ல என்பதையும், அது அவரது தாயார் நடத்தும் உணவகம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/NatrajanFanClub/status/1337067300197961732
Facebook Profile: https://www.facebook.com/WeSUPPORTThoothukudi/posts/3684196524972155
Facebook Profile: https://www.facebook.com/sportsindiashow/posts/681212265926895
Sun News: https://www.youtube.com/watch?v=sr9tFF3puLE
Ulagam Sutralam Vanga: https://www.youtube.com/watch?v=b_GT6pxGrjw
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)