திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkபெரியார், மணியம்மைக்குத் தாலி கட்டினாரா? வைரல் புகைப்படத்தின் உண்மைத்தன்மை?

பெரியார், மணியம்மைக்குத் தாலி கட்டினாரா? வைரல் புகைப்படத்தின் உண்மைத்தன்மை?

உரிமை கோரல் 

பொண்டாட்டிக்குத் தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனமென்று சொல்லி.. மகளுக்குத் தாலி கட்டிய மகான் தான் நம்ம பெரியார்.

சரிபார்ப்பு

சமீப காலமாகப் பெரியரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதரித்தோ அல்லது வசைபாடியோ அதிக செய்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன .இதில் பெரியாரைப்  பற்றிய தவறான புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

பல வருடங்களாகப் பெரியார் மீது விமர்சிக்கப்பட்ட ஒரு விஷயம், பெரியார் தனது வயதில் பாதி உள்ள மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது என்பதுதான். 70 வயது உள்ள பெரியார் 16 வயது உள்ள மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

உண்மை சோதனை

மணியம்மை மற்றும் பெரியாரின் திருமணத்தின் போது மணியம்மையின் வயது 29 ஆக இருந்தது. மணியம்மை, 1920 ஆம் ஆண்டு பிறந்தவர் .1949 ஆம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பெரியார் மற்றும் மணியம்மைக்குத் திருமணம் நிகழ்ந்ததாக விடுதலை நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

தனது சொத்துக்களைக்  கழகத்திற்கு எழுதி வைப்பதாகப் பெரியார் முடிவு செய்தார். அப்போதுதான் பெரியாருக்குப் பிறகு தனது பந்தங்களுக்கு மட்டுமே சொத்துக்கள் போகும்.அவர்களது கையெழுத்து இருந்தால்தான் கழகத்திற்குச் சொத்துக்களைப் பெயர் மாற்றம் செய்ய முடியும் என வழக்கறிஞர் கூறினார் .அந்த காலத்தில் ஒரு பெண்ணை தத்தெடுக்கும் உரிமை கிடையாது. தத்து போகும் உரிமையும் கிடையாது.

ஆகவே பெரியார் தனது பணிப்பெண்ணான மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.தனக்குப் பின்னால் கழகத்தையும், சொத்துக்களைக் கண்காணிக்கும் பொறுப்பையும் மணியம்மைக்கு சட்டப்படி வழங்கினார். ஆனால்  தத்தெடுத்த மகளைத் திருமணம் செய்து கொண்டதாகத் தவறான தகவல் பரப்பப்பட்டது.

பெரியார் மணியம்மையின் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறியத் தொடங்கினோம் .புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜில் தேடுகையில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் மணியம்மை இல்லை என்பது தெரியவந்தது .இது பெரியார் கழகத்தில் இருப்பவருக்குச் சுயமரியாதை திருமணம் செய்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் .மேலும் அதே மேடையில் அண்ணா மற்றும் வீரமணி ஆகியோர் இருப்பதையும்  காணலாம்.

முடிவுரை :

நமது ஆராய்ச்சிக்குப் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் பெண் மற்றும் பெரியாரின் முகம் தெரியும் அளவிற்குப் புகைப்படத்தைக் கட் செய்து பெரியார் மணியம்மைக்குத் தாலி கட்டியதாகத் தவறான செய்தியைப்பரப்பி வருகின்றனர்.

Sources

  • Google Search
  • Books 

Result: False/Fabricated 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular