Authors
உரிமை கோரல் :
இவர்கள் நேரு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கொரானா நோயாளிகள்.
சரிபார்ப்பு :
பெரிய அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. நேரு அரங்கத்தில், சென்னையில் உள்ள கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடுவதாக கிண்டல் செய்தும் பகிரப்பட்டு வருகிறது.
R
குவாரண்டைன் ஜோன்…. சென்னை ட்ரேட் செண்டர்…. டேய்… வந்துருக்குறது கொரோனா டா… இவனுங்க கரீனா னு நினைச்சிட்டானுங்க போல…. பாவம்டா அந்த கொரானா…
உண்மைத் தன்மை :
வைரலாகும் விடியோவை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் உள்ள அரசு கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்தவர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருவதாக ஜூன் 10-ம் தேதி india.com எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
திரிபுராவில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் உள்ளவர்கள் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சென்னையில் உள்ள அரங்கத்தில் நிகழ்ந்ததாக பரப்பி வருகிறார்கள். இதே வீடியோவை தெலங்கானா மாநிலத்தில் உள்ள காச்சிபௌலி அரங்கத்தில் நிகழ்ந்ததாகவும் தவறாக பரப்பி இருந்தனர்.
முடிவுரை :
எங்களின் ஆராய்சிக்குப் பின்னர் கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடும் வைரல் வீடியோ சென்னையில் நடந்தவை அல்ல என்பது தெரியவந்து உள்ளது .கிரிக்கெட் விளையாடுவது என தங்களின் நேரத்தை செலவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேர்மறையான ஆதரவையும், கேலிக்கும் உள்ளாகி வருகிறது.
Sources
- Google Search
- Newspaper
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)