திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkதுபாய் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

துபாய் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

துபாய் அஜ்மான் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாய் மார்க்கெட் தீவிபத்து என்று பரவியப் பதிவு.
வைரலான ஃபேஸ்புக் பதிவு.

Fact Check/Verification

துபாயிலிருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் உள்ளது அஜ்மான் நகரம். இந்நகரில் உள்ள மார்க்கெட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) அன்று மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கொரானா பாதிப்புக் காரணமாக இந்த மார்க்கெட் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக இவ்விபத்துக் காரணமாக எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இதுக்குறித்து UAE வெப் தமிழ் இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

துபாய் தீ விபத்துத் தொடர்பாக வந்தச் செய்தி
துபாய் தீ விபத்துத் தொடர்பானச் செய்தி

இவ்விபத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்சமயம் பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=-D5HlrQdt9A
துபாய் தீவிபத்து என்று பரவும் வீடியோ.

இதன் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை முழுமையாக ஆராய்ந்தப்பின் இதுக்குறித்த உண்மைகளை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவானது, அஜ்மான் நகர மார்க்கெட் தீ விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. இவ்வீடியோவானது எகிப்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எடுக்கப்பட்டதாகும்.

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி, எகிப்து நாட்டின் கெய்ரோ-இஸ்மாலியா நெடுஞ்சாலையில் உள்ள குரூட் ஆயில் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிரது.

இவ்விபத்துக் குறித்த செய்திப் பல இணையத் தளங்களில் வெளிவந்திருந்தது.

அல் மானிட்டர் இணயத்தளத்தில் வந்தச் செய்தி.
எகிப்து தீ விபத்துக் குறித்து அல் மானிட்டரில் வந்தச் செய்தி.

மேலும் “egypt fire” என்ற கீவேர்டைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

egypt fire கீவேர்ட் தேடல் முடிவுகள்.
கீவேர்ட் தேடல் முடிவுகள்.

இதில் வைரலான வீடியோ ஜூலை 16 ஆம் தேதியே எகிப்து தீ விபத்து என்று யூடிபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் அஜ்மான் மார்க்கெட் தீ விபத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிதான் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

எகிப்து தீ விபத்து குறித்த வீடியோ.

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் வைரலான வீடியோவில் காணப்படும் வீடியோவானது எகிப்து தீ விபத்தில் பிடிக்கப்பட்டது என்பதும் துபாய் தீ விபத்தில் பிடிக்கப்பட்டது அல்ல என்பதும் நமக்குத் தெளிவாகிறது.

Result: False


Our Sources

Facebook Profle: https://www.facebook.com/watch/?v=1552504661618728

UAE Web Tamil: https://www.uaetamilweb.com/news/ajman-market-fire/

YouTube: https://www.youtube.com/watch?v=-D5HlrQdt9A

YouTube: https://www.youtube.com/watch?v=cxs-b09lnBo

Al Monitor.Com: https://www.al-monitor.com/pulse/originals/2020/07/egypt-pipeline-fire-cairo-highway-blaze.html


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular