Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் உயிரிழந்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Fact Check/Verification
தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 16 மொழிகளில் 40000க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். பாடுவதைத் தவிர்த்து, நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆறு முறை தேசிய விருதுகளையும், ஒருமுறை ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைத் தந்து கௌரவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்,
“எனக்கு 2-3 நாட்களாக சற்று சுகமில்லாமல் உள்ளது. மார்பில் எரிச்சலாக உள்ளது. ஒரு பாடகராக எனக்கு இது மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் சிறிய காய்ச்சலும் சளியும் உள்ளது. இதை பரிசோதனை செய்தபோது, எனக்கு கொரானாவின் அறிகுறி சிறிய அளவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். என்னை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். நான் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. என் மூலம் வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் நான் மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறேன். நான் 2-3 நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் நலமாகி விடுவேன். என்மீது உள்ள அக்கறையில், யாரும் பதட்டப்பட்டு, ஃபோன் செய்ய வேண்டாம். நான் நலமாயிருக்கிறேன். நலமாயிருப்பேன்.”
என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் காலமடைந்து விட்டதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவியது. இச்செய்தி புதிய தலைமுறையில் வெளியிடப்பட்டதாகவும் அதில் இருந்தது.
இச்செய்தியின்உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
உண்மை என்ன?
வைரலாகும் விஷயம் குறித்து நம் விசாரிக்கையில், அது பொய்யான விஷயம் என்று நமக்கு உறுதியானது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்.பி.சரண் அவர்கள் வைரலாகும் இச்செய்தியை முழுமையாக மறுத்துள்ளார்.
புதியத் தலைமுறையில் ஒளிப்பரப்பானச் செய்தி தவறானது என்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை சற்றுக் கவலைக்கிடமாக இருந்தாலும் அவர் நலமாகி வருவார் என்று நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். உங்களின் அக்கறைக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், புதியத் தலைமுறையும் இச்செய்தியைத் தாங்கள் வெளியிடவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளது. இவ்வாறு தவறாக செய்திப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த நிமிடம் வரை நலமாக உள்ளார். எஸ்.பி.சரண் அவர்கள் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்தத் தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் வெளியிட்டு வருகிறார்.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் எஸ்.பி.பி குறித்து பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகிறது. அவர் நலமுடனே உள்ளார்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/Vishnusparkzz/status/1294291571928522752
SPB Facebook Profile: https://www.facebook.com/SPB/videos/309605840390909/
SP Charan Twitter Profile: https://twitter.com/PTTVOnlineNews/status/1294306933038407680
SP Charan Instagram Profile: https://www.instagram.com/p/CD_LjxHBz0f/?igshid=7jvnr4osvion
SP Charan Instagram Profile: https://www.instagram.com/p/CD836T2hhiq/
Puthiya thalaimurai Twitter Profile: https://twitter.com/PTTVOnlineNews/status/1294306933038407680
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.