வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடினாரா?

சுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாடகி சுசித்ரா ஓட்டல் அறையிலிருந்து பயந்து ஓடியதாகச் செய்தி ஒன்று ஊடகங்களில் வந்துள்ளது.

சுசித்ரா குறித்து பரவிய செய்தி

Fact check/Verification

ரேடியோ ஜாக்கி, பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் சுசித்ரா. சீராகச் சென்றுக் கொண்டிருந்த இவரது வாழ்க்கையை மொத்தமாகத் புரட்டிப் போட்டது சுச்சி லீக்ஸ்.

இந்த நிகழ்வானது அவரது சொந்த வாழ்வையும் பொது வாழ்வையும் பெரிதாக பாதித்தது. இதன்பின் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பொது வெளியில் வருவதை இவர் தவிர்த்திருந்தார்.

தற்போது மீண்டும் இவரின் முகம் ஊடகங்களில் தெரிய ஆரம்பித்துள்ளது. அவ்வப்போது பொது விஷயங்களுக்காக தன் குரலை உயர்த்தி வருகிறார்.  மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, சாத்தான் குளம் படுகொலைக் குறித்து வீடியோ ஒன்றை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்போது  விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா அவர்கள் கலந்துக்கொள்ளவிருப்பதாகவும், இதற்காக இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி ஒன்று உலவி வந்தது.

இந்நிலையில் சுசித்ரா அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஓட்டல் அறையிலிருந்து பயந்து, அலறியடித்து ஓடி வந்ததாகவும் தொலைக்காட்சி நிறுவனத்தார் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் ஓட்டல் அறைக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இசெசெய்தியை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சுசித்ரா குறித்துப் பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்துத் தேடினோம்.

அவ்வாறு தேடியதில், சுசித்ரா அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தியை முழுமையாக மறுத்திருந்ததைக் காண முடிந்தது.

சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

“ Hey guys, I’m having to post this to dispel some myths. Please do not believe rumours that I’m scared in my room or am loitering outside. I assure you guys, I’m safe, happy, and being taken care of really well.  And with this view, who would ever complain?”

என்று பதிவிட்டிருந்தார்.

சுசித்ரா அவர்களின் மறுப்பு
Source: Instagram

இதனைத் தமிழில் மொழிப்பெயர்த்தால்,

“ நண்பர்களே! சில விஷயங்களை தெளிவு செய்வதற்காகவே இதை பதிவு செய்கிறேன். நான் அறையில் பயந்ததாகவோ அல்லது  தேவையில்லாமல் வெளியே ஓடியதாகவோ வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றேன். நான் நன்றாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறேன்.  நீங்களே பாருங்கள் இந்த அழகான இடத்தில், யாருக்காவது பிரச்சனை இருக்குமா?”

என்பதே அர்த்தமாக வரும்.

மேற்கூறியக் கூற்றுப்படிப் பார்த்தால் ஊடகங்களில் சுசித்ராக் குறித்து வந்தச் செய்தியானது தவறான ஒன்று என்பது தெளிவாகிறது.

Conclusion

பாடகி சுசித்ரா குறித்து ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Result: False

Our Sources

NewsJ: https://twitter.com/NewsJTamil/status/1322044713956900864

Dhinathanthi: https://twitter.com/dinathanthi/status/1322100325768077312

Malaimalar: https://twitter.com/maalaimalar/status/1321839866632572933

Ms. Suchitra: https://www.instagram.com/p/CG6qUS1jfESUiWuNTUurHVgijUjuVIoRJmfU900/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல்முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular