Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் மகிழுந்துக்கு காப்பீடுக் கட்டணம் கட்டவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
Fact Check/ Verification
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழக அரசியலைப் பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளே மிகப்பெரிய ஆளுமை செலுத்தி வருகிறது.
ஆனால் இவ்விருக் கட்சிகளின் முகமாக செயல்பட்ட வந்த மாபெரும் தலைவர்கள் தற்போது இல்லை. மக்கள் ஆதரவு மிகுந்த இத்தலைவர்கள் இல்லாதது இவ்விருக் கட்சிகளுக்கும் மாபெரும் பின்னடைவே.
இச்சூழலைப் பயன்படுத்தி புதிதாக பலர் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் அவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, முதன்முறையாக வரவிருக்கும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கின்றார்.
இதற்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி வரும் மகிழுந்தின் காப்பீடு(Insurance) காலாவதியாகி எட்டு மாதங்கள் ஆகிவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்
கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் TN07 CS 7779 என்ற பதிவெண்ணையுடைய மகிழ்வுந்தின் காப்பீடு காலாவதியாகியதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்து, இத்த்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினோம்.
ஆய்வின் முதல் கட்டமாக காப்பீடு காலவதியானதாக கூறப்படும் மகிழுந்தின் பதிவெண்ணைக் கொண்டு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து இணையத்தளத்தில் பரிசோதித்தோம்.
அவ்வாறு பரிசோதித்ததில் அந்த மகிழுந்தின் காப்பீடு காலக்கெடுவானது 06/03/2022 வரை உள்ளதை நம்மால் அறிய முடிந்தது. இதன்படி பார்க்கையில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பதை நம்மால் உணர முடிகிறது.
கமல்ஹாசன் தரப்பும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இத்தகவலுக்கு மறுத்துத் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்த செய்தியானது சன் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
Conclusion
கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் மகிழுந்துக்கு காப்பீடுக் கட்டணம் கட்டவில்லை என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/Dravida_Monster/status/1344644130228510721
Twitter Profile: https://twitter.com/SB54053072/status/1344649310403784706
Sun News: https://twitter.com/sunnewstamil/status/1344878744654082053
Twitter Profile: https://twitter.com/Jeeva50889748/status/1345044124978847744
Vahan NR e-services: https://vahan.nic.in/nrservices/faces/user/searchVehicleDetails.xhtml
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.