வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட்

“நான் மலையாளியாக இருந்தால் மலையாள விஷன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன். சில “அண்ணன்”களைப் போல சொந்த இனத்தை மறைத்து தமிழ், தமிழென்று சோற்றுக்காக கூவ வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஊடகவியலாளர் விஷன் மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் மீது டிவிட்டரில் காட்டம்!”என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Facebook Link

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Facebook Link

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

Also Read: என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து, விஷன் தமிழக முதல்வர் குறித்து இவ்வாறு டிவீட் செய்தாரா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில், பாரிசாலன் எனும் யூடியூபர் ஊடகவியலாளர் விஷனை மலையாளி குறிப்பிட்டு டிவீட் பதிவிட்டிருந்ததையும், அதற்கு, நான் மலையாளியாக இருந்தால் மலையாள விஷன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன். சில “அண்ணன்”களைப் போல சொந்த இனத்தை மறைத்து தமிழ், தமிழென்று சோற்றுக்காக கூவ வேண்டிய அவசியம் எனக்கில்லை என விஷன் பதிலளித்து டிவீட் செய்திருந்ததையும் காண முடிந்தது.

இந்த டிவீட்டில் எவ்விடத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதல்வர் ஸ்டாலின் விஷன் குறிப்பிட்டிருக்கவில்லை. இருப்பினும் இதுக்குறித்து தெளிவான ஒரு விளக்கம் பெற ஊடகவியலாளர் விஷனைத் தொடர்புக் கொண்டோம்.

இதற்கு,

பாரிசாலன் என்பவர் நான் மலையாளி என்று கூறிகொண்டு வருகின்றார். நான் மலையாளி இல்லை, அதை யாருக்கும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. பாரிசாலனுக்கு நான் பதிலளிக்கும்போது, நான் மலையாளியாக இருந்தால் மலையாள விஷன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன். சில “அண்ணன்”களைப் போல சொந்த இனத்தை மறைத்து தமிழ், தமிழென்று சோற்றுக்காக கூவ வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று பதிலளித்திருந்தேன். இதில் குறிப்பிட்டுள்ள ‘அண்ணன்’ எனும் வார்த்தை யாரை குறிப்பிடுகின்றது என்பதை அனைவரும் அறிவர். அது நிச்சயம் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டது அல்ல.  வேண்டுமென்றே சிலர் தேவையில்லாமல் பொய்யாக இச்செய்தியை பரப்பி வருகின்றனர்

என்று விஷன் பதிலளித்தார்.

இதனடிப்படையில் பார்க்கையில் ஊடகவியாளர் விஷன் முதல்வர் ஸ்டாலின் குறித்து எவ்வித டிவீட்டும் செய்யவில்லை என்பது உறுதியாகின்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த பொய்யான தகவலானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டுகளை வெளியிட்டதா என்பதை அறிய, தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர்,‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று பதிலளித்தார்.

Also Read: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

Conclusion

சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக ஊடகவியலாளர் விஷன் டிவிட்டரில் விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Phone Conversation with Journalist Vishan, Dated June 30, 2022
Phone Conversation with Vinoth, Thanthi Tv, Dated June 30, 2022
Vishan’s Tweet, Tweeted on June 29, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular