ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ

Fact: வைரலாகும் ஆடியோ  AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பப்பட்டதாகும்.

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வரும் அவரது தந்தையுமான கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று கூறியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. மேலும் அவரது குடும்பத்தார் கொள்ளையடிப்பதாக ஸ்டாலின் கூறியதாகவும் அந்த ஆடியோவில் இருந்தது.

இந்த ஆடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ

X Link | Archive Link

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ

Archive Link

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

Fact Check/Verification

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோவை கூர்மையாக கவனித்து கேட்கையில்  செயற்கைத்தனமாக அந்த ஆடியோவை உருவாக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதில் இருப்பதை காண முடிந்தது.

ஆகவே வைரலாகும் ஆடியோவை டீப் ஃபேக் அனலைசிஸ் யூனிட்டிற்கு (Deepfake Analysis Unit (DAU)) அனுப்பி அந்த ஆடியோ குறித்து விசாரித்தோம். அவர்கள் அந்த ஆடியோவை ஆய்வு செய்து அதுக்குறித்த அறிக்கையை நம்மிடம் பகிர்ந்தார்கள். அந்த அறிக்கையில் வைரலாகும் ஆடியோ செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து Truemedia.org, DeepFake–O-Meter உள்ளிட்ட தளங்களில் இந்த ஆடியோ குறித்து ஆராய்கையில் வைரலாகும் ஆடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என இத்தளங்களும் உறுதி செய்தன.

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ
கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக பரவும் ஆடியோ

Also Read: பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் ஆடியோ AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Result from Deepfake Analysis Unit
Result from Truemedia.org
Result from DeepFake–O-Meter

Update:-

DAU நமது கேள்வியை அடிப்படையாக வைத்து வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோவை ஆய்வு செய்து, அந்த ஆடியோவானது AI தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று தொழிற்நுட்ப விளக்கங்களுடன் கட்டுரை ஒன்றை ஆகஸ்ட் 05, 2024 அன்று வெளியிட்டுள்ளது.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular