திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkமத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறினாரா அண்ணாமலை?

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறினாரா அண்ணாமலை?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்ற அண்ணாமலை

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு அவர் தமிழ்நாடு பட்ஜெட்டை விமர்சித்தபோது எடுக்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஆடு அண்ணாமலையின் பதில். நாதஸ் திருந்திட்டானா.?” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from facebook/ramkumar.krish.583

Facebook Link/Archived Link

Screenshot from facebook/cbi.cbi.7106

Facebook Link/Archived Link

Screenshot from facebook/K S Muthu

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?

Fact Check/Verification

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது கடந்த மார்ச் 9, 2022 அன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது ABP Nadu பக்கத்தில் நமக்குக் கிடைத்தது.

“BJP Annamalai Speech | விலை உயர்வு.. வரி உயர்வு..இது தான் பட்ஜெட்..அண்ணாமலை ஆவேசம் | TN Budget 2022” என்கிற தலைப்பில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு பட்ஜெட்டை அண்ணாமலை விமர்சித்த இந்த வீடியோவே அவர் மத்திய பட்ஜெட்டை விமர்சனம் செய்ததாகப் பரவுகிறது.

 Also Read: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் 2022ஆம் ஆண்டு வீடியோ!

Conclusion

மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் வீடியோ உண்மையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டை அவர் விமர்சித்த காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
YouTube Video From, ABP Nadu, Dated March 09, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular