செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkவயதான மூதாட்டி ஒருவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

வயதான மூதாட்டி ஒருவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: எப்பேர்ப்பட்ட மாமனிதன் நம்‌ தமிழின தலைவர் பிரபாகரன்

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அதில் இருப்பது உண்மையில் கலைஞர் கருணாநிதி புகைப்படமாகும்.

வயதான மூதாட்டி ஒருவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனது புகைப்படத்தை தனது காலணிகளைக் கழட்டிவிட்டு மரியாதையுடன் வணங்குவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”எப்பேர்ப்பட்ட மாமனிதன் நம்‌ தமிழின தலைவர்” என்று அப்புகைப்படம் பரவுகிறது.

வயதான
Screenshot from x @innocentbuddyy

X Link/Archived Link

Screenshot from Facebook/Nandha Kumar

Facebook Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வீட்டிலிருந்து 60 கி.மீக்குள் சுங்கச்சாவடி இருந்தால் சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தாரா நிதின் கட்கரி?

Fact Check/Verification

வயதான மூதாட்டி ஒருவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படத்தில் உண்மையில் இடம்பெற்றிருப்பது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் என்பது நமக்கு உறுதியாகியது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதலே கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டியின் புகைப்படம் திமுகவினராலும், 2023ஆம் ஆண்டு திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோராலும் இப்புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அப்புகைப்படத்தில் கருணாநிதி புகைப்படம் இடம்பெற்றுள்ள இடத்தில் பிரபாகரனின் புகைப்படத்தை எடிட் செய்து மாற்றியுள்ளனர்.

பிரபாகரன் புகைப்படம் வைரல் புகைப்படத்தில் பொருந்தாமல் தனியாகத் தெரிகிறது என்பதும் நமக்கு உறுதியாகியது. தலைவர் என்கிற வார்த்தை வெளியில் காணப்படுவதுடன் அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பிட்ட புகைப்படமே தற்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி என்பதாக பரவி வருகிறது.

 Also Read: சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

வயதான மூதாட்டி ஒருவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை வணங்குவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
X Post From, @Senthilthanavel, Dated February 08, 2021
X Post From, @TRBRajaa


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular