Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படும் வீடியோ!
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும். சாமியார்கள் போல் வேடமிட்டு திருட்டுத்தொழில் செய்தவர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கிய வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?
Fact Check/Verification
வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இத்தேடலில் ஜீ நியூஸ் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் சாதுக்கள் வேடமிட்டு திருட்டுத்தொழிலில் ஈடுப்பட்ட நான்கு பேரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களும் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இச்செய்திகளிலும் இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சாதுக்களாக வேடமிட்ட திருடர்கள் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
Also Read: வங்கதேசத்தில் இந்துக்கள் அடித்து துன்புறுத்தப்படுவதாகப் பரவும் பீகார் வீடியோ!
Conclusion
வங்கதேசத்தில் இந்து சாமியார்கள் இஸ்லாமியர்களால் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உத்திரப்பிரதேசத்தில் நடந்ததாகும். சாமியார்கள் போல் வேடமிட்டு திருட்டுத்தொழில் செய்தவர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கிய வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from Zee News, Dated August 10, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.