வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 27, 2024

HomeFact Checkவிஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ...

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: GOAT திரைப்படம் குறித்த ரசிகரின் விமர்சனம்

Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு வாரிசு திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட விமர்சனமாகும்.

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”போதும்டா சாமினு வெளிய வந்துட்டு இருக்கானுங்க” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @manikiki96

X Link/Archived Link

Screenshot from X @_saba_dmk

X Link/Archived Link

Screenshot from X @CineScopeTweets

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!

Fact Check/Verification

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவில் Reviews Now என்கிற யூடியூப் பக்கத்தின் வாட்டர் மார்க் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்களுடைய யூடியூப் பக்கத்தை ஆராய்ந்தோம்.

அப்போது, கடந்த ஜனவரி 11, 2023ல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தினை ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்திருந்த காட்சி இடம்பெற்றிருந்த நிலையில் அந்த வீடியோவையே தற்போது GOAT திரைப்படத்தின் விமர்சனம் என்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெரியவந்தது.

 Also Read: சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?

Conclusion

விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையில் வாரிசு திரைப்படத்திற்கு கிடைத்த விமர்சனம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From Reviews Now, Dated January 11, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular