வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkசூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.

Fact: இத்தகவல் தவறானதாகும். ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர்.

“சோலார் பேனலினால் சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று ஒரு முட்டா பய பண்டிதன் பேசினதை கேட்டு சோலார் பேனலை உடைக்கும் அறிவற்ற மாட்டு மூளை கூட்டம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.

X Link | Archive Link

சூர்ய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.

Archive Link

சூர்ய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் கிளைமேட் சாமுராய் எனும் இணைய ஊடகத்தில் Watch: Solar panels at 100 Mw solar plant in Maharashtra vandalized due to non payment of wages’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியானது பிப்ரவரி 15, 2018 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

சூர்ய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.
Screengrab from Climate Samurai

இச்செய்தியில் ஊதியம் தராததால் சோலார் பேனல்களை ஊழியர்கள் அடித்து உடைத்ததாக கூறப்பட்டிருந்தது. இச்சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சாலிஸ்கான் நகரத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் கோ நியூஸ் இந்தியாவின் டிவிட்டர் பக்கத்திலும் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியிலும் ஊதியம் தராததாலேயே சோலார் பேனல் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சூர்ய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை உடைத்த மக்கள்.
Screengrab from Go News India

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

சூரிய கடவுளுக்கு பாதிப்பு என்று சோலார் பேனல்களை மக்கள் உடைத்ததாக பரவும் வீடியோத் தகவல் தவறானதாகும். உண்மையில் ஊதியம் தராததால் கோபமடைந்த ஊழியர்கள் இச்செயலை செய்துள்ளனர். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Climate Samurai, Dated February 15, 2018
X post from Go News India, Dated February 21, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular