ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ...

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: திருப்பதி விவகாரம் குறித்து பேசிய பியூஷ் மனுஷ் மீது தாக்குதல்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”குட்ட குட்ட குனிந்து கொன்டே இருக்கமாட்டான்டா இந்துக்கள் நேத்து திருப்பதி லட்டு விவகாராத்தில் ஹிந்துகளை இழிவு படுத்திய பியுஷ் மனுஷ்க்கு சேலத்தில் முதல் மரியாதை” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @Maha39574742

X Link/Archived Link

Screenshot from X @Sivasuriyanadar

X Link/Archived Link

Screenshot from X @narayanan215804

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.    

Also Read: சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!

Fact Check/Verification

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோ குறித்து அறிய கீ-வேர்டுகள் மூலமாகத் தேடினோம். மேலும், வைரல் வீடியோவில் Newsglitz லோகோவும் இடம்பெற்றிருந்தது. நம் தேடலில் கடந்த ஆகஸ்டு 28, 2019 அன்று நியூஸ் க்ளிட்ஸ் வெளியிட்டிருந்த இந்த வீடியோ காட்சி நமக்குக் கிடைத்தது.

சேலத்தில் பியூஷ் மனுஷ் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பாஜகவினர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவே திருப்பதி விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவுகிறது.

முன்னதாக பியூஷ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ”Beef entered the most famous, richest and highest reverend Tirupati Balaji temple … The deity, the priests, the administration all failed. None took responsibility nor apologised !! Hmmnn !!” என்று பதிவிட்டிருந்தார். மேலும், பல்வேறு பதிவுகளையும் இதுதொடர்பாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?

Conclusion

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, NewsGlitz Tamil, Dated August 28, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular