வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkசீமானை அயோக்கியன் என்று விமர்சித்தாரா ஆவுடையப்பன்?

சீமானை அயோக்கியன் என்று விமர்சித்தாரா ஆவுடையப்பன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையிலேயே விமர்சித்தார் ஆவுடையப்பன்.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். ஆவுடையப்பன் வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆடியோவை விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் பேசிய ஆடியோவுக்கு பதிலாக மாற்றி இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்து வருடம் செப்டம்பரில் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு என்று காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நாளிதழ் ஒன்றில் செய்தி வந்ததை தொடர்ந்து அது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இந்த நாளிதழ் செய்தியை ஆதரிக்கும் விதமாக சத்துணவுத் திட்டத்தை விமர்சித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார்.

இந்நிலையில் ஜீ தமிழ் விருந்து வழங்கும் விழாவில் ஜீ தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவுடையப்பன் சீமான் மேடையில் இருக்கும்போதே ‘சத்துணவு திட்டம் வேண்டாம் என்று கூறுபவர்கள் அயோக்கியர்கள்’ என்று விமர்சித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையிலேயே விமர்சித்தார் ஆவுடையப்பன்.

X Link | Archive Link

சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையிலேயே விமர்சித்தார் ஆவுடையப்பன்.

Archive Link

சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையிலேயே விமர்சித்தார் ஆவுடையப்பன்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பேசியதால் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

ஆவுடையப்பன் சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையில் விமர்சித்ததாக பரவும் வீடியோவில் ஆவுடையப்பன் பேசுகையில் ஆடியோ இடையில் தடைப்பட்டு மீண்டும் தொடர்பே இல்லாமல் தொடர்வதை காண முடிந்தது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே உண்மையிலேயே ஆவுடையப்பன் இவ்வாறு பேசினாரா என்பதை உறுதி செய்ய வைரலாகும் வீடியோவில் காணப்படும் விருது வழங்கும் விழா குறித்து தேடினோம். இத்தேடலில் ஜீ தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் இதுக்குறித்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த வீடியோவில் சீமான் ஆவுடையப்பனையும், ஆவுடையப்பன் சீமானையும் பாராட்டி பேசுவதை காண முடிந்தது. இதுத்தவிர்த்து சத்துணவு குறித்து ஆவுடையப்பன் எங்கும் இவ்வீடியோவில் பேசி இருக்கவில்லை.

இதனையடுத்து சத்துணவு குறித்து ஆவுடையப்பன் பேசி இருந்த ஆடியோ குறித்து தேடினோம். அதில் ஜீ தமிழில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இக்கருத்தை அவர் பேசி இருப்பதை காண முடிந்தது. இதுக்குறித்த வீடியோவும் ஜீ தமிழின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

 Also Read: திருப்பதி லட்டுவிற்கு நெய் வழங்கிய நிறுவனம் இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதாக பரவும் பொய்!

Conclusion

ஆவுடையப்பன் சீமானை அயோக்கியன் என்று விருது வழங்கும் மேடையில் விமர்சித்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசிய ஆடியோவை விருது வழங்கும் விழாவில் ஆவுடையப்பன் பேசியதாக மாற்றி எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Facebook post from Zee Tamil, Dated May 03, 2024
Facebook post from Zee Tamil, Dated May 27, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular