செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

HomeFact Checkமுஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதா?

முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதா?

Authors

Sabloo Thomas has worked as a special correspondent with the Deccan Chronicle from 2011 to December 2019. Post-Deccan Chronicle, he freelanced for various websites and worked in the capacity of a translator as well (English to Malayalam and Malayalam to English). He’s also worked with the New Indian Express as a reporter, senior reporter, and principal correspondent. He joined Express in 2001.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டது.

Fact: கொச்சியில் கெட்டுப்போன மீன்களே விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதை வைத்தே இந்த தவறான தகவல் பரப்பப்படுகின்றது.

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்ததாகவும், கேரளா போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டது.

X Link | Archive Link

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டது.

Facebook Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பழனி பஞ்சாமிர்தத்திற்கும் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் நிறுவனம் நெய் வழங்குவதாகப் பரவும் பொய்!

Fact Check/Verification

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதாக கூறி பரப்பப்படும் வீடியோவில் “பிரேவ் இந்தியா” என்ற ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து, பிரேவ் இந்தியாவின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் கேரளாவில் கொச்சியில் பல்வேறு கடைகளில் கெட்டுப்போன மீன் பிடிபட்டதாக கூறி வைரலாகும் வீடியோவை பிரேவ் இந்தியா பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது பிரேவ் இந்தியாவில் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 25, 2024 அன்று பகிரப்பட்டிருந்தது.

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டது.
பிரேவ் இந்தியா யூடியூப் வீடியோ

இதை தொடர்ந்து தேடுகையில் இந்தியன் எக்ஸ்பிரஸில் இதுக்குறித்த செய்தி வந்திருப்பதை காண முடிந்தது.

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த செய்தி

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: திருப்பதி ஏழுமலையான் கோவில் படிகளை கழுவி சுத்தம் செய்தாரா பவன் கல்யாண்?

Conclusion

கேரளாவில் முஸ்லீம் மீன் கடையில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை கலந்து விற்பனை செய்யப்பட்டதாக கூறி பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். கேரள சுகாதாரத்துறையினர் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்பட்டு வருகின்றது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
YouTube Video of 
Brave India dated July 25, 2024
News Report by New Indian Express dated July 25, 2024
News Report by Karalionline date July 24, 2024
News Report by Kerala Kaumudi on July 25, 2024

(இந்த செய்தி நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular