Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை
Fact: வைரலாகும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும்.
குண்டும் குழியுமாக காணப்படும் ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ரோடு போட்டவனையாவது… கமிஷன் நிறைய கொடுத்திருப்பான், மழை அதிகம் என்று எதனா ஒரு காரணம் சொல்லி ஒரு பெர்ஸன்ட் ஆவது மன்னிக்கலாம்… ஆனா மனசாட்சியே இல்லாம இந்த ரோட்டுக்கு பார்டர் போட்டாம்பாரு அவனமட்டும் மன்னிக்கவே கூடாதுடா சாமி” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2026 தேர்தல் தொடர்பாக உதயநிதி-அண்ணாமலை ரகசிய சந்திப்பு; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது இன்ஸ்டாகிராமில் கடந்த ஆகஸ்டு மாதம் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள் நமக்குக் கிடைத்தன. அதில், சுதந்திரம் என்று இந்தோனேசிய மொழியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அப்புகைப்படங்களை வைத்து ஆராய்ந்தபோது ”Decorating the Village to Enliven the 79th Anniversary of the Republic of Indonesia, Residents in Jepara Criticize Damaged Roads Creatively” என்று கடந்த ஆகஸ்டு 06, 2024 அன்று இந்தோனேசிய மொழியில் வெளியாகியிருந்த செய்திக்கட்டுரை நமக்குக் கிடைத்தது.
ஜெபாரா என்கிற மத்திய ஜாவா தீவில் அமைந்துள்ள கிராமத்தில் இந்தோனேசிய சுதந்திர தினத்தில் சாலைகளின் மோசமான நிலையை எடுத்துக்காட்டும் வகையில் வெள்ளைப்பெயிண்ட் அடித்த மக்கள் என்று Jepara update என்கிற யூடியூப் செய்தி சேனலில் இந்த வீடியோ குறித்த செய்தி இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட சாலையின் வீடியோவே தற்போது தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூர் சாலையின் நிலை என்று பரவுகிறது.
Also Read: குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பாலஸ்தீன கொடியுடன் இருப்பதாகப் பரவும் AI புகைப்படம்!
Conclusion
குண்டும் குழியுமாக ஸ்ரீபெரும்புதூர் சாலை என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram Post From, Joworo Project, Dated August 05, 2024
YouTube video From, Jepara update, Dated August 09, 2024
News Report From, Merdeka, Dated August 06, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.