திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact Checkஉதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றார் திருச்சி சிவா.

Fact:வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானதாகும். தந்தி தொலைக்காட்சியும், மாலை முரசும் இதை உறுதி செய்துள்ளது. திருச்சி சிவாவும் இத்தகவல் பொய்யானது என்று மறுத்துள்ளார்.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தது அவசரகதியில் எடுத்த முடிவு. திமுகவில் பலருக்கு அதில் உடன்பாடில்லை என்று திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கூறியதாக நியூஸ்கார்டுகள் சில சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றார் திருச்சி சிவா.

Post Link | Archive Link

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றார் திருச்சி சிவா.

Post Link | Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check/Verification

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, முன்னதாக திருச்சி சிவா அவர்களை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் மாலை முரசு மற்றும் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி பரப்பப்படுவதால் இந்நிறுவனங்கள் இக்கார்டுகளை வெளியிட்டதா என தேடினோம்.

இத்தேடலில் இந்த இரண்டு நிறுவனங்களும் வைரலாகும் நியூஸ்கார்டுகளை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்று தந்தி தொலைக்காட்சியும் மாலை முரசும் அவைகளின் சமூக ஊடகப் பங்கங்களில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றார் திருச்சி சிவா.
தந்தி தொலைக்காட்சியின் மறுப்பு பதிவு
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றார் திருச்சி சிவா.
மாலை முரசின் மறுப்பு பதிவு

Also Read: 2025 ஜனவரி முதல் அனைத்து சனி, ஞாயிறுகளும் அரசு விடுமுறை  என்று பரவும் செய்தி உண்மையா?

Conclusion

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Tiruchi Siva, MP, DMK
X post from Thanthi TV, Dated December 23, 2024
X post from Malaimurasu TV, Dated December 23, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular