Authors
உரிமைக்கோரல்
டென்னிஸ் பேட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடும் எங்கள் சர்வாதிகாரி தலைவர்
சரிபார்ப்பு
தி.மு.க தலைவர் ஸ்டாலின் டென்னிஸ் பேட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடும் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து அதிகப்படியாகக் கிண்டல் செய்யப்பட்டவர் திமுகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள். இந்நிலையில் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கிண்டலாகப் பகிரப்பட்டு இருந்தது. இந்த வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் அரியத் தொடங்கினோம்.
உண்மை தன்மை
ஸ்டாலின் அவர்களின் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2019ம் ஆண்டு திரு .ரங்கராஜ் பாண்டே அவர்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் “picture of the day” என்று இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஸ்டாலின் அவர்கள் கையில் டேபிள் டென்னிஸ் பேட்டை வைத்து விளையாடுவது போன்ற புகைப்படம் தான் காணமுடிகிறது .
2019-ல் ரங்கராஜ் பாண்டே அவர்களின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டப் புகைப்படத்தில் டேபிள் டென்னிஸ் விளையாடப் பயன்படுத்தப்படும் சிறிய பேட்டை வைத்தே விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஸ்டாலின் கையில் பெரிய டென்னிஸ் பேட்டை வைத்து எடிட் செய்து உள்ளனர்.
கல்யாணராமன் என்பவர் மே 2-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினின் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஸ்டாலின் அவர்களையும் டேக் செய்து உள்ளார்.கல்யாண்ராமனின் ட்விட்டர் பக்கத்தில் கல்யாண் bjp என்ற பெயரைக் குறிப்பிட்டு உள்ளார் . ஆனால் அவர் தமிழக பாஜகவில் எந்த ஒரு பதவியிலும் இல்லை, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் கல்யாணராமன் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
முடிவுரை
எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கையில் இருக்கும் சிறிய பேட்டை டென்னிஸ் பேட்டை யாரோ எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு இருக்கின்றனர் என்று தெரியவந்து உள்ளது.
Sources
- Google Search
Result: False
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)