Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
திமுக அரசு கோவிலை இடித்ததாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தீர்த்தவாரி நிகழ்ச்சி செய்யக்கூடாது என்று தடுத்த காவலரை கோவில் யானை தூக்கி எறிந்ததா?
திமுக அரசு கோவிலை இடித்ததாக வீடியோ ஒன்று பரவிதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அதில் இச்சம்பவம் குறித்து கடந்த வருடம் நவம்பரில் பாலிமர் நியூஸ் எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் சென்னை –கொல்கத்தா நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைக்காக திருவள்ளூர் சோழவரம் அருகிலிருக்கும் சிலம்பாத்தம்மன் கோவிலின் முகப்பு மண்டபம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தி இந்து ஊடகமும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் இழப்பீடாக 29 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பு கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தேடுகையில் தந்தி டிவி, தினகரன், தினமணி உள்ளிட்ட ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளிலும் கோவில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை துறையினரால் இடிக்கப்பட்டது என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் சிலம்பாத்தம்மன் கோவில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப்பட்டுள்ளது எனவும், வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்துக்கும் தமிழ்நாட்டில் பொறுப்பிலிருக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை எனவும் அறிய முடிகின்றது.
Sources
Report by Polimer News, dated November 19, 2024
Report by The Hindu, dated November 19, 2024
Report by Thanthi TV, dated November 19, 2024
Report by Dinakaran, dated November 19, 2024
Report by Dinamani, dated November 19, 2024
Ramkumar Kaliamurthy
December 8, 2025
Ramkumar Kaliamurthy
December 3, 2025
Ramkumar Kaliamurthy
December 1, 2025