Fact Check
154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் தகவல் உண்மையானதா?
Claim: 154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் வீடியோ.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படுவர் மத்திய பிரதேசத்தில் இருக்கும் பாத்யன் ஆசிரமத்தை சார்ந்த சியாராம் பாபா ஆவார். இவர் கும்பமேளா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, டிசம்பர் 11, 2024 அன்றே உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழந்தபோது அவருக்கு 94 வயதே ஆகி இருந்தது.
“மகா கும்பமேளாவில் பங்கேற்க இமயமலை மலைகளிலிருந்து வந்த 154 வயது துறவி” என்று குறிப்பிட்டு வீடியொ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மேக்கப்பில் ஐஸ்வர்யா ராய் போல் ஜொலிக்கும் கும்பமேளா ‘மோனாலிசா’ என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக கூறி, வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் journalist.teena எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 12, 2024 அன்று வைரலாகும் இதே வீடியோவை பதிவிட்டு சியாராம் பாபா மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதை அடிப்படையாக கொண்டு தேடியதில் IANS எக்ஸ் பக்கத்தில்மத்திய பிரதேசத்தில் இருக்கும் பாத்யன் ஆசிரமத்தை சார்ந்த சியாராம் பாபா காலை 6.30 மணிக்கு மரணமடைந்துவிட்டதாக டிசம்பர் 11, 2024 அன்று வீடியோவுடன் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் துறவி இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது.
இதன்படிபார்க்கையில் கும்பமேளா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இத்துறவி இறந்துவிட்டார் என்பது தெளிவாகின்றது.
இதனையடுத்து தேடுகையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சியாராம் பாபா மரணம் குறித்த செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் 94 வயதில் அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் பிடிஐ, இந்தியன் எக்ஸ்பிரஸ், நியூஸ் 18 உள்ளிட்ட ஊடகங்களிலும் சியாராம் பாபா மரணம் குறித்த செய்தி வெளியிட்டிருப்பதையும், அச்செய்திகளிலும் சியாராம் பாபா மரணிக்கையில் அவருக்கு 94 வயது என்று குறிப்பிட்டிருப்பதையும் காண முடிந்தது.
Also Read: கோவையில் கார் கண்ணாடி உடைத்து பேக் திருடப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
Conclusion
154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் துறவி சியாராம் பாபா கும்பமேளா தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு டிசம்பர் 11, 2024 அன்றே உயிரிழந்துவிட்டார். அதேபோல் இறக்கும்போது அவரது வயது 94 ஆகும்; 154 அல்ல.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Instagram post by journalist.teena Dated December 12, 2024
X post by IANS, Dated December 11, 2024
Report from TOI, Dated December 11, 2024
Report from PTI, Dated December 11, 2024
Report from Indian Express, Dated December 11, 2024
Report from News 18, Dated December 11, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்