Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கும்பமேளாவில் சாமியார் வேடத்தில் புகுந்த இஸ்லாமியர் என்று பரவும் படம்
Also Read: கும்பமேளாவில் ரகசியமாக இரவில் நீராடிய அகிலேஷ் யாதவ் என்று பரவும் புகைப்படச் செய்தி உண்மையா?
கும்பமேளாவில் சாமியார் வேடத்தில் இஸ்லாமியர் ஒருவர் புகுந்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘Maha Kumbh 2025: Youth’s Suspicious Behaviour Sparks Tension In Prayagraj’ என்று தலைப்பிட்டு ஈடிவி பாரத் செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இச்செய்தியில் சாதுக்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் ஆயுஷ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இளைஞர் ஒருவர் நுழைந்ததாகவும், சரியான அடையாள அட்டை இல்லாததால் அவர் போலீசில் ஒப்ப்டைக்கப்பட்டதாகவும், போலீஸ் விசாரணையில் அவர் பெயர் ஆயுப் அலி என்று ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்செய்தியில் அந்நபரின் படமும் இடம்பெற்றிருந்தது. அப்படமானது வைரலாகும் படத்திலிருந்து வேறுபட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து வைரலாகும் படம் குறித்து ஆய்வு செய்கையில் அப்படமானது ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி படம் என அறிய முடிந்தது.
Hive Moderation, Is It AI உள்ளிட்ட ஏஐ கண்டறியும் தளங்கள் இப்படமானது ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் என்பதை உறுதி செய்தன.
வைரலாகும் இத்தகவல் தமிழ் தவிர்த்து ஆங்கிலம் உட்பட வேறு சில மொழிகளிலும் பரவி வருகின்றது. அவற்றில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு தீவிரவாதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
ஆகையால் பிரயாக்ராஜ் டிஜிபியின் செய்தி தொடர்பு அதிகாரியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு விசாரித்தோம். அவர்கள் இத்தகவல் தவறானது. கும்பமேளா பகுதியில் எந்த இரு தீவிரவாதியும் கைது செய்யப்படவில்லை என பதிலளித்தனர்.
Also Read: பெரியார் ஆதரவாளர்களே பெரியார் படத்தை செருப்பால் அடித்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?
Sources
Report by ETV Bharat, Dated January 13, 2025
Hive Moderation Tools
Is It AI Tools
Telephone Conversation With PRO-DIG Prayagraj On January 24, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Vijayalakshmi Balasubramaniyan
January 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 31, 2025
Ramkumar Kaliamurthy
January 30, 2025