Fact Check
2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ; தாலிபன்களால் பொது இடத்தில் பெண்மணி கொல்லப்பட்டதாக வைரல்

வீட்டை வெளியே வந்ததால் தாலிபன்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருகின்றது.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபன் வசம் வந்ததிலிருந்து இதுக்குறித்த செய்திகளே ஊடகங்களில் நிரம்பி காணப்படுகின்றது. இந்நிலையில் நம் பயனர் ஒருவர் நியூஸ்செக்கரின் ஹெல்ப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அவ்வீடியோவில் இஸ்லாமியப் பெண்மணி ஒருவரை துப்பாக்கி ஏந்திய சிலர் சுட்டுக் கொல்கின்றனர். இந்த நிகழ்வானது தாலிபன்களால் நிகழ்த்தப்பட்டது என்றும், வீட்டை விட்டு வெளியே வந்ததாலேயே அப்பெண்மணி சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


(பயனர் பகிர்ந்த வீடியோவில் இஸ்லாமியப் பெண்மணி ஒருவரை துப்பாக்கி ஏந்திய சிலரால் சுட்டுக் கொல்லப்படும்படி உள்ளதால் அதை இங்கே பிரசுரிக்கவில்லை)
நம் பயனர் பகிர்ந்த வீடியோவில் இருக்கும் சம்பவம் உண்மையிலேயே தாலிபன்களால் நிகழ்த்தப்பட்டதா என்பது குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 800 இந்தியர்களை ஒரே விமானத்தில் அழைத்து வந்த இந்திய ராணுவம்; வைரலாகும் படம் உண்மையானதா?
Fact Check/Verification
வீட்டை வெளியே வந்ததால் தாலிபன்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து அதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் வைரலாகும் வீடியோ ஆஃகானிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல, அது சிரியாவில் எடுக்கப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவில் கள்ளக்காதல் செய்ததாக கூறி பெண் ஒருவர் அல் கொய்தா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வே தற்போது தாலிபன்களால் நிகழ்த்தப்பட்டது என்று கூறி பரப்பப்படுகின்றது.

இதுக்குறித்த ஊடகங்களில் அப்போது செய்தி வந்திருந்தது. அதை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.
Conclusion
வீட்டை வெளியே வந்ததால் தாலிபன்களால் பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையில் 2015 ஆம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)