Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்தியா போர் தொடுக்கும் என்ற பயத்தில் வங்கிகளில் குவிந்த பாகிஸ்தான் மக்கள்
வைரலாகும் வீடியோ ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாகும்.
இந்தியா போர் தொடுக்கும் என்ற பயத்தில் வங்கிகளில் குவிந்த பாகிஸ்தான் மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இந்தியா போர் தொடுக்கும் என்கிற பீதியில் பாகிஸ்தானில் மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வங்கியில் குவிந்தனர்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
இந்தியா போர் தொடுக்கும் என்ற பயத்தில் வங்கிகளில் குவிந்த பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 31, 2021 அன்று TRT World என்கிற பக்கத்தில் ”காபூல் வங்கிகளில் ஆப்கானிஸ்தான் மக்கள் பண எடுக்கும் காட்சி” என்பதாகப் பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்ந்தபோது ”Afghan banks reopen as people queue up to withdraw money” என்கிற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தி கிடைத்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் வங்கிகளில் இருக்கும் தங்களது பணத்தை எடுக்க மக்கள் குவிந்த காட்சி வீடியோ என்பது இதன்மூலம் உறுதியாகியது. இதுபற்றிய செய்தி Daily Mail பக்கத்திலும் இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட வீடியோவே பாகிஸ்தான் மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க குவிந்ததாகப் பரவி வருகிறது.
Also Read: இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்தியா போர் தொடுக்கும் என்ற பயத்தில் வங்கிகளில் குவிந்த பாகிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, TRT World, August 31, 2021
Report from Daily Mail, Dated September 01, 2021
Vijayalakshmi Balasubramaniyan
May 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 26, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 21, 2025