ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதிமுக ஆட்சியில் கோவிலில் வரையப்பட்ட கிறிஸ்துவ தேவதைகள் ஓவியம் என்று பரவும் பழைய புகைப்படம்!

திமுக ஆட்சியில் கோவிலில் வரையப்பட்ட கிறிஸ்துவ தேவதைகள் ஓவியம் என்று பரவும் பழைய புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 108 திவ்யதேசங்களில் ஒன்று பழம்பெருமை வாய்ந்த
திருக்கண்ணபுரம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கிருத்துவ தேவதைகளை ஓவியமாக தீட்டி உள்ளனர் – அர்ஜூன் சம்பத்

Fact: அவர் குறிப்பிடும் புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகிய செய்தி ஒன்றில் இடம்பெற்ற புகைப்படமாகும்.

திமுக ஆட்சியில் அறநிலையத்துறையால் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் கிறிஸ்துவ தேவதைகள் ஓவியங்களாக வரையப்படுவதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் இதுகுறித்து, “108 திவ்யதேசங்களில் ஒன்று பழம்பெருமை வாய்ந்த
திருக்கண்ணபுரம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கிருத்துவ தேவதைகளை ஓவியமாக தீட்டி உள்ளனர். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்!”
என்று இந்த புகைப்படத்தை பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Screenshot from X @imkarjunsampath

Archived Link

Screenshot from facebook/stillpalani

Facebook Link

இதனைத் தொடர்ந்து, தினமலரிலும் ”தி.மு.க., ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறை, அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு, சமீபத்திய உதாரணம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் படங்கள்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக அரசு தீபாவளியில் ₹350 கோடிக்கு மது விற்க இலக்கு வைத்துள்ளதா?

Fact Check/Verification

திமுக ஆட்சியில் அறநிலையத்துறையால் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் கிறிஸ்துவ தேவதைகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படம் முதலில் திருக்கண்ணப்புரம் பெருமாள் கோவிலைச் சேர்ந்ததா என்பது குறித்து அறிய இந்து சமய அறநிலையத்துறை பக்கத்தில் இருக்கும் 360 சுழற்சி முறையில் ஆராய்ந்தபோது, திருக்கண்ணப்புரம் செளரிராஜ பெருமாள் கோவில் பெருமாள் சன்னதியின் கருவறைக்கு முந்தைய பிரகாரத்தின் மேற்கூரையில் இந்த ஓவியம் இடம்பெற்றிருப்பதை நம்மால் அறிய முடிந்தது.

மேலும், தற்போது வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2018ஆம் ஆண்டே, அதிமுக ஆட்சி காலத்தில் Free temples from state control and make India truly secular’ என்கிற தலைப்பில் சண்டே கார்டியன் என்கிற ஊடகப்பக்கத்தில் வெளியாகியிருந்த கட்டுரையில், “ A portion of the roof of 1,000-year-old Lord Vishnu temple at Thirukannapuram in Tamil Nadu painted with Christian angels during renovation.” என்று இந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. கட்டுரையின் உள்ளேயும் இந்து சமய அறநிலையத்துறை திருக்கண்ணப்புரம் பெருமாள் கோவிலை மறுசீரமைப்பு செய்யும்போது கிறிஸ்துவ தேவதைகளை வரைந்துள்ளது என்பதாக மட்டுமே வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததன. மேலும், இக்கட்டுரை வெளியாகிய 2018ஆம் ஆண்டிற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளிலும் அதிமுகவே தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இப்புகைப்படத்தில் வரையப்பட்டிருப்பவை கிறிஸ்துவ மத தேவதைகள்தான் என்று அப்போதைய அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டதாகவோ, இல்லை இதுதொடர்பாக வழக்குகளோ எதுவும் செய்திகளாக நமக்குக் கிடைக்கவில்லை. மேலும், இந்த ஒரு செய்தியை தவிர வேறெங்கும் இப்புகைப்படம் இடம்பெற்றிருக்கவில்லை.

கடந்த 2017ஆம் ஆண்டு தினமணி வெளியிட்டுள்ள “உயர்நீதிமன்றம் உத்தரவு; திருக்கண்ணப்புரம் செளரிராஜப் பெருமாள் கோவில் பிரமோத்ஸவம் துவக்கம்” என்கிற செய்தியில் அக்கோவிலுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திலும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக. 

தொடர்ந்து, கடந்த ஜூன் 16, 2018 அன்று நக்கீரன் வெளியிட்டுள்ள “கோயில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி தருமா? சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கேள்வி” என்கிற செய்தியில் திருக்கண்ணப்புரம் செளரிராஜப் பெருமாள் கோவிலுக்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். அவர்களுடைய விளக்கத்தையும் கூடிய விரைவில் இங்கே பதிவு செய்கிறோம். உண்மையில் அந்த ஓவியம் அதிமுக காலகட்டத்தில் புதியதாக வரையப்பட்டதா, அல்லது ஏற்கனவே இருந்த ஓவியங்கள் மறுசீரமைக்கப்பட்டதா என்பது குறித்தும் அறிய முயன்று வருகிறோம்.

Also Read: காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சியில் இணையும் பெண்ணிற்கு முத்தமிடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

திமுக ஆட்சியில் அறநிலையத்துறையால் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் கிறிஸ்துவ தேவதைகள் ஓவியங்களாக வரையப்படுவதாக பரவும் புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு செய்தி ஒன்றில் வெளியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Photos from, HRCE
Article From, The Sunday Guardian, Dated November 10, 2018


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular