ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதுருக்கி நிலநடுக்கம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

துருக்கி நிலநடுக்கம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

துருக்கி நிலநடுக்கத்தின் காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot From Facebook/psguys.colachel

துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்காணோர் உயிரிழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், துருக்கி நிலநடுக்க காணொளி என்பதாக பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதில், “துருக்கி நிலநடுக்கம்” என்பதாக வீடியோ ஒன்று பரவுகிறது.

Screenshot From Facebook/fizal.khan.37
Screenshot From Facebook/suvanapathai

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் கிளாஸ்கோவில் பேசிய உரை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Fact Check / Verification

துருக்கி நிலநடுக்க வீடியோ என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த அக்டோபர் 30, 2020 ஆம் ஆண்டு Guardian News யூடியூப் பக்கத்தில் “Turkery Earthquake Footage Captures moment building collapses in izmir” என்கிற தலைப்பில் இந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.

மேலும், இதுகுறித்த செய்தியில் துருக்கியில் கடந்த அக்டோபர் 30, 2020 ஆம் ஆண்டு 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறிப்பிட்ட வைரல் வீடியோ தற்போதைய நிலநடுக்கத்துடன் தொடர்புடையது இல்லை; கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

Also Read: ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Conclusion

துருக்கி நிலநடுக்கம் என்பதாகப் பரவுகின்ற வீடியோ ஒன்று கடந்த 2020 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
YouTube Video From, Guardian News, Dated October 30, 2020
Report From, NPR, Dated October 30, 2020
Report From, Springer Link

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular