வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkதுருக்கி நிலநடுக்கம்-உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தவறான, தொடர்பற்ற படங்களை பகிர்ந்த தந்தி டிவி!

துருக்கி நிலநடுக்கம்-உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தவறான, தொடர்பற்ற படங்களை பகிர்ந்த தந்தி டிவி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

துருக்கி நிலநடுக்கம் – உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்கிற தலைப்பில் தந்தி டிவி புகைப்பட ஆல்பம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Screenshot From Twitter @ThanthiTV

Archived Link

அதில், இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

screenshot from Twitter @RKamala74265811

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட துருக்கியின் தற்போதைய நிலநடுக்கப் பதிவு என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check / Verification

துருக்கி நிலநடுக்கம் – உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தந்தி டிவி உட்பட பலரும் பகிரும் புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

துருக்கி நிலநடுக்கத்தில் தனியாக அமர்ந்திருக்கும் குழந்தை என்று பரவும் புகைப்படம் ஷட்டர் ஸ்டாக் பக்கத்தில் ஸ்டாக் போட்டோவாக இடம்பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட வகையில் மாடலாக குழந்தையை வைத்து எடுக்கப்பட்ட புகைப்பட வரிசையில் இடம் பெற்றுள்ளது இப்புகைப்படம். கடந்த 2022 ஆம் ஆண்டே GulF News கட்டுரை ஒன்றிலும் இப்புகைப்படம் காணக்கிடைத்தது.

தொடர்ந்து, வயதானவர் ஒருவர் ரொட்டித்துண்டுடன் இருக்கும் புகைப்படம் ஸ்டாக் வகையைச் சேர்ந்ததே. ResearchGate பக்கத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 1999 ஆம் ஆண்டு துருக்கி ட்யூஸ் நிலநடுக்கத்துடன் தொடர்பு படுத்தி இப்புகைப்படம் பரவியுள்ளது.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டுரை ஒன்றில் இப்புகைப்படம் இடம் பெற்றுள்ளது. Abdurrahman Antakyal என்கிற புகைப்படக்கலைஞர் எடுத்த புகைப்படம் என்றும் இதுகுறித்து Researchgate பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக இடம்பெற்றுள்ள நாய் ஒன்று இடிபாடுகளில் சிக்கிய ஒருவரிடம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது, அப்புகைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியான American Kennel Club கட்டுரை ஒன்றில் நமக்குக் காணக்கிடைத்தது. மேலும், Alamy ஸ்டாக் இணையதளத்திலும் 2018 ஆம் ஆண்டு இப்புகைப்படம் காணக்கிடைத்தது.

IStockphoto பக்கத்திலும் காணப்படும் இப்புகைப்படம், கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கு பதிவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: துருக்கி நிலநடுக்கம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு வீடியோ!

Conclusion

துருக்கி நிலநடுக்கம் – உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்று தந்தி டிவி உட்பட பலரும் பகிரும் புகைப்படங்களில் பலவும் தற்போதைய நிலநடுக்க நிகழ்வுடன் தொடர்புடையது அல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources
ShutterStock
Article From, Gulf News, Dated December 16, 2022
Article From, hurriyetdailynews, Dated November 13, 2020
ResearchGate
Alamy
Article From, AKC, Dated October 18, 2021
IStockPhoto

YouTube Video From, HaberJans2, Dated November 12, 2013


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular