ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகமலா ஹாரிஸ் மடிசார் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாரா?

கமலா ஹாரிஸ் மடிசார் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், மடிசார் புடவை அணிந்திருந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமலா ஹாரிஸ்
Source: Twitter

Fact check/Verification:

கமலா ஹாரிஸ்…இந்த வருட அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து, உலகம் முழுவதும் ரசிகர்களைக் குவித்து துணை அதிபராக வெற்றி பெற்றவர்.

இதில், நமக்கான சிறப்பான விஷயம் என்னவென்றால் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி. அதுவும், தமிழகத்தின் மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம், இவரது தாய்வழி உறவுகளின் கூடு. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை இவரது வெற்றி பறைசாற்றியுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் இவரது சாதியை முன்வைத்து பல புரளிகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக கமலா ஹாரிஸ் மடிசார் அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதனை சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் உட்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/supriyasahuias/status/1325309354417901570?s=20
Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

உண்மையும் பின்னணியும்:

கமலா ஹாரிஸ் மடிசார் புடவை உடுத்தியிருந்தார் என்று பரவும் இப்புகைப்படம், மற்றொருவரின் தலையினை மட்டும் புகைப்படத்தில் எடிட் செய்து கமலா ஹாரிஸின் தலையினை மற்றொரு புகைப்படத்தில் இருந்து பொருத்தியிருப்பது தெரியவந்தது.

Source: Twitter

அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது, உண்மையான புகைப்படத்தில் இருப்பவர் விசாகா ஹரி என்பது தெரிய வந்தது. இவர் ஒரு `கதாகாலசேபம்’ கலைஞர். அவர் மடிசார் அணிந்துள்ள இப்புகைப்படம், இணையத்தில் நமக்கு காணக்கிடைத்தது.

விசாகா ஹரி
Source: Google

மேலும், அதே புடைவையில் அவரது வேறு சில புகைப்படங்களையும் நம்மால் காண முடிந்தது. எனவே, விசாகா ஹரியின் புகைப்படத்தில், கமலா ஹாரிஸின் தலையை போட்டோ எடிட் செய்து இந்த மடிசார் புகைப்படம் வைரல் ஆக்கப்பட்டுள்ளது. உண்மையில் கமலா ஹாரிஸ் மடிசார் அணியவில்லை என்பதும் உறுதியாகிறது.

Conclusion:

எனவே, அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ் மடிசார் புடவை அணிந்திருந்தார் என்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்ற இப்புகைப்படம் போலியானது, போட்டோஷாப் செய்யப்பட்டது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே, வாசகர்கள் யாரும் இப்புகைப்படத்தை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Result: Fabricated/False Content

Our sources:

Twitter Profile: https://twitter.com/Yusuf_baawa/status/1325747974417178624?s=20

Google: https://www.google.com/search?q=vishaka+hari+madisar&sa=X&hl=en-IN&sxsrf=ALeKk01MQhzdlAtkQUk8cBVgTYH-to_bsg:1605018775576&tbm=isch&source=iu&ictx=1&fir=qzuweJCvgBYK-M%252CmNrEf8d0Jcq_GM%252C_&vet=1&usg=AI4_-kRId0wluIVPCGi9I_2sA9KSSBjxuw&ved=2ahUKEwi4-ObvmPjsAhVP7HMBHXhlDSIQ9QF6BAgKECc&biw=1366&bih=600#imgrc=zamS-ZhTN5_xnM

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular