ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkராஜா ரவிவர்மா ஓவியம் என்று மீண்டும் பரவும் நடிகை சுவாதியின் புகைப்படம்!

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று மீண்டும் பரவும் நடிகை சுவாதியின் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ராஜா ரவிவர்மாவின் ஓவியம்
Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது நடிகை சுவாதி ஆகும். 

ராஜா ரவிவர்மா ஓவியம் மற்றும் மோனாலிசா ஓவியத்தின் புகழ் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”Here are two portraits. One is by Raja Ravi Verma, which perhaps you have never seen. Another is by Leonardo da Vinci which you must have seen million times. Now think about how marketing and propaganda lobbies bias our minds. *All your choices are based on what lobbies” என்பதாக இப்புகைப்படம் ஆங்கிலத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ராஜா ரவிவர்மா ஓவியம்
Screenshot from Twitter @PanchvatiNasik

Archived Link

ராஜா ரவிவர்மா ஓவியம்
Screenshot from Facebook/IndiaTales7

Archived Link

Screenshot from Facebook/Nïkî Sïdhû

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் ராஜா ரவிவர்மா ஓவியம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது நடிகை சுவாதி, ராஜா ரவிவர்மாவின் பிரபலமான ஓவிய மங்கை ராதாவை மறு உருவாக்கம் செய்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது தெளிவாகியது. இந்த புகைப்படம் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சுவாதி.

மேலும், பிரபல இயக்குனரான விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கடந்த 2021ஆம் ஆண்டு ராஜா ரவிவர்மாவின் உண்மையான ஓவியத்துடன் மோனாலிசா ஓவியத்தின் புகழை ஒப்பிட்டு மேலே பரவும் பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆனால், அதில் ராஜா ரவிவர்மா ஓவியம் இடம்பெற்றிருக்கும் இடத்தில் நடிகை சுவாதியின் புகைப்படத்தை மாற்றி பரப்பி வருகின்றனர் என்பது நமக்குத் தெளிவாகியது.

Also Read: மபியில் சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு பதில் போலியான நபருக்கு பாதபூஜை செய்ததா பாஜக?

Conclusion

ராஜா ரவிவர்மா ஓவியம் என்று பரவும் படம் உண்மையில் நடிகை சுவாதியின் ஓவிய மறு உருவாக்கப் புகைப்படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Facebook Post From, Swathi Reddy, Dated June 2019

Facebook Post From, Vivek Ranjan Agnihotri, Dated July 2021
Instagram Post From, bridesofhyderabad, Dated June 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular