Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இத்தகவல் தவறானதாகும். வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கோழிக்கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்திய பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோவே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
“கேரளா முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாக்கிஸ்தான் ஆதரவாக சிந்துநதி நீரை திறந்துவிட கோரி ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாகிஸ்தான் கிரானா மலை மீது இந்தியா நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பரப்பப்படும் வீடியோவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சார்ந்தவர்கள் தங்களது கட்சி கொடியையும், மறைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் சி.எச். முகமது கோயாவையும் புகழ்ந்து கோஷங்கள் எழுப்புவதை கேட்க முடிந்தது.
இதுத்தவிர்த்து பாகிஸ்தான் குறித்தோ, சிந்து நதி குறித்தோ எவ்வித கோஷமும் எழுப்பப்படவில்லை. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் வைரலாகும் வீடியோவை கூர்மையாக கவனித்தோம். அதில் அனுப் ஆன்டனி ஜோசப் எனும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் பாஜகவை சார்ந்த அனுப் ஆன்டனி ஜோசப் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் ‘Secular Kerala!’ என்று தலைப்பிட்டு ஏப்ரல் 19, 2025 அன்று, அதாவது பஹல்கம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பே வைரலாகும் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ‘kozhikkotte_sahib’ எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏப்ரல் 17, 2025 அன்று இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

வைரலாகும் வீடியோவிலிருப்பவர்கள் அரங்காடி என்று பெயரிட்ட டீ-சர்ட்டுகளை அணிந்திருப்பதால் அரங்காடி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்த தேடலை தொடங்கினோம். அதில் ஏப்ரல் 17, 2025 அன்று வைரலாகும் வீடியோலிருப்பவர்கள் அதே இடத்தில் எடுத்த புகைப்படம் பகிரப்பட்டிருப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் சிந்து நதி விவகாரத்துக்கும் தொடர்பில்லை என அறிய முடிகின்றது. ஏனெனில் பஹல்கம் தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே இவ்வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து தேடுகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் இளைஞரணி தேசிய துணைத்தலைவர் ஷிபு மீரான் இவ்வீடியோ குறித்து விளக்கம் தெரிவித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருப்பதை காண காண முடிந்தது.
அவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு கோழிக்கோட்டில் ஏப்ரல் 16 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் என தெரிவித்திருந்தார். வீடியோவில் காணப்படுபவர்கள் காசர்கோடு அரங்காடி பகுதியை சார்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அதேபோல் வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தானின் கொடி அல்ல; அது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என்று ஷிபு மீரான் தெளிவு செய்திருந்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
Also Read: மணிப்பூரில் ஆயுதங்களும், பணங்களும் இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கோழிக்கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்திய ஆர்ப்ப்பாட்ட ஊர்வலத்தில் அரங்காடி கட்சியினர் கலந்துக்கொண்ட நிகழ்வே இவ்வாறு தவறாக பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post from Anoop Antony Joseph, Dated April 19, 2025
Instagram post from the user name ‘kozhikkotte_sahib‘, Dated April 17, 2025
Instagram post from Arangadi IUML, Dated April 17, 2025
Facebook post from Shibu Meeran, Muslim Youth League National Vice President, Dated May 12, 2025
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025
Ramkumar Kaliamurthy
May 16, 2025