Fact Check
அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி
Fact
வைரலாகும் வீடியோ டெல்லியில் நடைபெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தாகும்.
அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற விபத்து என்பதை அறிய முடிந்தது.
“Apartment Fire | மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்க கீழே குதித்த 3 உயிர்கள் பலி “ என்று தந்தி டிவி வெளியிட்டிருந்த செய்தி வீடியோவில் டெல்லி துவாரகாவில் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் மாடியிலிருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி என்று செய்தி இடம்பெற்றிருந்தது.
இச்செய்தி, சத்தியம் செய்திகளிலும் விரிவாக வெளியிடப்பட்டிருந்தது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பால்கனியில் இருந்து குதித்த யாஷ் என்பவரும், அவருடன் குதித்த ஆஷிமா, சிவம் ஆகிய குழந்தைகளும் உயிரிழந்ததாக Times of India வெளியிட்டுள்ள செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த சம்பவமே அகமதாபாத் விமான விபத்துடன் இணைத்து பரப்பப்படுகிறது.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
Conclusion
அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ டெல்லி துவாரகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துடன் தொடர்புடையது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, Thanthi Tv, Dated June 10, 2025
YouTube Post By Sathyam TV, Dated June 10, 2025
Report from TOI, dated June 11, 2025