Claim: இறைவன் உருவாக்கிய அற்புத படைப்பு என்று குறிப்பிட்டு வைரலாகும் அழகிய பறவைகள்.
Fact: வைரலாகும் வீடியோவில் இருக்கும் பறவைகள் Ai தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
“இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இறைவனுக்கு, நன்றி இதை காணொளியாகப் பதிவு செய்த அந்த மனிதருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதில் தலையில் குடை போன்ற அமைப்பை உடைய ஜோடி பறவைகள் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்பட்டது.

