Fact Check
விமானத்தில் பகவத் கீதை படித்த புதின்; வைரலாகும் படம் உண்மையானதா?
Claim
விமானத்தில் பகவத் கீதை படித்த புதின்.
Fact
வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.
ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். அச்சமயத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பக்வத் கீதை புத்தகத்தை அவருக்கு பரிசளித்தார்.

இந்நிலையில் பிரதமர் அளித்த பகவத் கீதையை புதின் விமானத்தில் படித்ததாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக இளைஞர் அணி மாநாட்டில் வழங்கப்பட்ட பையில் குவாட்டர் பாட்டில் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத் கீதை படித்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து தேடினோம். அத்தேடலில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததாக முக்கிய ஊடகங்களில் எதிலும் செய்தி வந்திருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் படத்தை கவனித்து பார்க்கையில் அப்படமானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடிந்தது.

அதை தெளிவு செய்ய Hive Moderation, Sightengine உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணைய கருவிகளை பயன்படுத்தி வைரலாகும் படத்தை பரிசோதித்தோம்.
அச்சோதனையில் அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் என உறுதியானது.


இதனையடுத்து Trusted Information Alliance குழுமத்தின் The Deepfakes Analysis Unit (DAU) அமைப்பும் வைரலாகும் படம் குறித்து ஆராய்ந்து அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படம் என உறுதி செய்து நமக்கு தெரிவித்தது.
அந்த அமைப்பு AI or Not, Image Whisperer உள்ளிட்ட இணையத்தளங்களில் ஆராய்ந்து இத்தகவலை நமக்கு தெரிவித்தது.


Also Read: நிஜ புலியையும், மானையும் வைத்து சினிமா ஷூட்டிங் என்று செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோ உண்மையா?
Conclusion
ரஷ்ய அதிபர் புதின் விமானத்தில் பகவத் கீதை படித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான படமாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. அதை இங்கே படிக்கலாம்.
Sources
Hive Moderation Website
Sightengine Website
DAU Analysis