Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: எலான் மஸ்க் உடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்பட பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
“உலகின் முன்னணி நிறுவனங்களான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனர் எலான் மஸ்க் உடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு….” என்று சிலர் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “பேருந்துகள் நாசமாய் இருக்க, கார் ரேஸ் விட்டால் வளர்ச்சியா?” என்று பரவும் உடைந்த அரசு பேருந்து படம்!
எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வருகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதைப் பலரும் பகிர்ந்திருந்தாலும், குரேஷி உள்ளிட்ட சிலர் அது AI புகைப்படம் என்று குறிப்பிடாமல் பகிர்ந்திருந்தனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று அவரது X பக்கத்தில் இப்புகைப்படத்தைப் பகிர்ந்து, “I wish this AI generated image becomes true If #Tesla comes to Tamil Nadu, it will be a #Goat move by our Cm” என்று பதிவிட்டிருந்தார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலும், தன்னுடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்தை முன்னிட்டும் இந்த AI புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். nammabengaluroo உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளப்பக்கங்களும், செய்திகளும் கூட இப்புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தன. ஆனால், ஒருசிலர் தவிர பலரும் இப்புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கவில்லை.
எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தை Hive Moderation மூலமாக ஆராய்ந்து அப்புகைப்படம் 99.9% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்துள்ளோம்.
Also Read: சாலையிலுள்ள குழிகளை எமன்- சித்ரகுப்தன் வேடமிட்டு கிண்டலடித்த வீடியோ தமிழகத்தில் எடுக்கப்பட்டதா?
எலான் மஸ்க்கை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் டிவி குரேஷி உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வருகின்ற புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post from Venkat Prabhu, Dated September 04, 2024
Hive Moderation Detection
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 8, 2025
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Ramkumar Kaliamurthy
July 1, 2025