Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பெரிய பந்து போல பொழியும் ஆலங்கட்டி மழை.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதா?
பெரிய பந்து போல ஆலங்கட்டி மழை பொழிந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்த உண்மையை அறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் @ashiq_almadi எனும் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் “Ai Generated” எனும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அதேபோல் @morecla_rec எனும் டிக்டாக் பயனர் ஐடியின் லோகோ இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது.

இதனை தொடர்ந்து @morecla_rec எனும் பயனர் ஐடியை கொண்ட டிக்டாக் பக்கத்தில் ஆராய்கையில் இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து செயற்கை நுண்ணறிவு வீடியோக்களை கண்டறிய உதவும் இணைய கருவிகளான Hive Moderation மூலம் சோதித்தோம். அச்சோதனையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு வீடியோ என பதில் வந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் பெரிய பந்து போல ஆலங்கட்டி மழை பொழிந்ததாக பரவும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என தெளிவாகின்றது.
Sources
X post by @ashiq_almadi, dated October 27, 2025
TikTok post by @morecla_rec, dated October 24, 2025
Hive Moderation
Ramkumar Kaliamurthy
November 13, 2025
Ramkumar Kaliamurthy
November 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 15, 2025