Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ்
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.
கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”மகாபிரபு நீ ஏன் இங்க இருக்க உன்ன மாதிரி ஆளுங்க இப்படி ஒரு புண்ணிய இடத்துக்கு போக கூடாது” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 154 வயது துறவி இமயமலையிலிருந்து கும்பமேளா காண வந்ததாக பரவும் தகவல் உண்மையானதா?
கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் உடல் உறுப்புகள் வித்தியாசமாக தோற்றமளித்ததால் அதனை Hive Moderation Tool மற்றும் Sight Engine Tool மூலமாக ஆராய்ந்தபோது அது AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகியது.


மேலும், இப்புகைப்படம் குறித்து ஜனவரி 28, 2025 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ள பிரகாஷ் ராஜ், ”FAKE NEWS ALERT the last resort of bigots and coward army of “Feku Maharaj” is to stoop down and spread FAKE NEWS.. even during theire Holy ceremony.. what a SHAME .. Complaint has been filed against the Jokers .. face the consequences” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்பு கொண்டு பேசியபோது அவர், “AI மூலமாக உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் பொய்யானது. வலதுசாரியினர் அவர்களுடைய புனிதமான விழாவின்போது கூட எவ்வாறு இப்படிப்பட்ட அவதூறு அரசியலை செய்கிறார்கள் என்று நான் வியந்து நோக்குகிறேன். மதத்தையும், நம்பிக்கையும் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரான என்னுடைய போராட்டம் சரியானது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்த நாடு விரைவில் விழித்துக்கொள்ளும்” என்று தெரிவித்தார். இதன்மூலமாக, இப்புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.
Also Read: சீமான் ஆபத்தான அரசியல் பேசுவதாக விமர்சனம் செய்துள்ளாரா இயக்குநர் வெற்றிமாறன்?
கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post by Prakash Raj, Dated January 28, 2025
Hive Moderation tool
Phone Conversation With Prakash Raj, Dated January 31, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.)
Vijayalakshmi Balasubramaniyan
January 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 27, 2025
Tanujit Das
January 24, 2025