ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஅஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்றாரா ஈ.பி.எஸ்?

அஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்றாரா ஈ.பி.எஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் –  ஈ.பி.எஸ்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தந்தி தொலைக்காட்சியும் அதிமுக தரப்பும் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

X Link | Archived Link

 இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் 'அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

 இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் 'அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஹிஜாப் அணிந்து தேசியக்கொடி ஏற்றிய கர்நாடகா கலெக்டர் எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் “அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தாரா என ஆராய்ந்தோம். இதில் எடப்பாடி பழனிசாமி நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த வீடியோ ஒன்று தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

அதில் பாரத் பெயர் மாற்றம் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு,“அதை நான் பார்க்கவில்லை. அதை பார்த்து, முழுமையான விவரம் அறிந்தப்பின் இதுக்குறித்த தகவல் தருகிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தார்.  

தொடர்ந்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. முழுமையான தகவல் வந்தப்பின் இதுக்குறித்து பதிலளிப்பதாகவே எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விநாயகர் சதுர்த்தி என்று பரவும் கொரோனா காலகட்ட பழைய செய்தி!

Conclusion

இந்தியாவின் பெயர் பாரதம் என மாற்றப்பட்டால் அஇஅதிமுகவின் பெயரும் அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மாற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Thanthi TV, Dated September 05, 2023
YouTube Video from Thanthi TV, Dated September 05, 2023
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone Conversation with Vinothkumar, Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular