Fact Check
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதா?
Claim
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதாக பரவும் வீடியோ.
Fact
திருப்பூர் மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததை திரித்து எடப்பாடி கூட்டத்தில் நடந்ததாக பரப்பப்படுகின்றது.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?
Fact Check/Verification
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதாக பரவும் வீடியோவில் நியூஸ் தமிழ் ஊடகத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து நியூஸ் தமிழ் ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
அத்தேடலில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு திமுக நிர்வாகி பணம் பட்டுவாடா செய்ததாக கூறி நியூஸ் தமிழ் எக்ஸ் பக்த்தில் இவ்வீடியோ வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஒன் இந்தியா தமிழ் ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் புதிய தலைமுறை, ஜீ தமிழ் நியூஸ், கலாட்டா மீடியா உள்ளிட்ட ஊடகங்களிலும் வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்திகளிலும் இச்சம்பவம் திமுக கூட்டத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் வீடியோவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பில்லை.
- உதயநிதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததை திரித்து எடப்பாடி கூட்டத்தில் நடந்ததாக பரப்பப்படுகின்றது.
Also Read: வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா உதயநிதி?
Conclusion
எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு பணம் தரப்பட்டதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by News Tamil 24X7, dated November 29, 2025
Report by One India Tamil, dated November 29, 2025